உடல் நலத்தில் நன்மை விளைவிக்கும் பல பொருட்கள் நம் சமையலறையிலேயே இருக்கின்றன. அதை மறந்துவிட்டு, ஆன்லைன் மோகத்தில் விழுந்ததால்தான், பலவித நோய்கள் நம்மைப் பதம்பார்க்கத் தொடங்கிவிட்டன.
இதற்கு இயற்கை மருத்துவமே ஒரேத் தீர்வு. அந்த வகையில், வெந்தய விதைகளை உட்கொள்வது பல கடுமையான நோய்களிலிருந்து நமக்கு பாதுகாப்பை அளிக்கும். எனினும் அதை உட்கொள்வதற்கான சரியான முறையை அறிந்துகொள்வது நல்லது. வெந்தயம் தோல் நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது, முடியை வலுப்படுத்த உதவுகிறது. இது மட்டுமல்லாமல், சர்க்கரை, இதய நோய் போன்ற கடுமையான நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது.
நோய்கள்
-
நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை நோய்
-
வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது
-
முடி உதிர்வதை தடுக்கும்
-
தோல் தொற்றுக்கு எதிராக பாதுகாக்கிறது
-
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
-
பருக்களை தடுக்கும்
-
வயிற்று தொற்றை தடுக்கும்
மருத்துவ நன்மைகள்
வெந்தய விதையில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. நீங்கள் வெந்தய விதைகளை உட்கொள்ளும்போது, இந்த கரையக்கூடிய நார்ச்சத்து உடலை அடைந்த பிறகு கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சும் செயல்முறையை குறைக்கிறது.
இன்சுலின் அளவு
ரொட்டி, அரிசி, கஞ்சி, ஓட்ஸ், பருப்பு போன்ற தானியங்களைச் சாப்பிடும்போது, கார்போஹைட்ரேட் உடலுக்குள் சென்றடையும். இந்த கார்போஹைட்ரேட் விரைவான செரிமானத்துடன் இரத்தத்தில் கரைந்தால், உடலில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. இதனால் சர்க்கரை பிரச்சனை அதிகரிக்கிறது. வெந்தய விதைகள் கார்போஹைட்ரேட்டின் செரிமானத்தை மெதுவாக்கும் போது, அது சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும்.வெந்தய விதையில் உள்ள அமினோ அமிலங்கள் நமது இரத்தத்தில் இரத்தத்துடன் பாயும் சர்க்கரையை உடைக்க வேலை செய்கின்றன. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து இன்சுலின் அளவு சரியாக இருக்கும்.
எப்படி சாப்பிடுவது?
ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வடிகட்டி, மென்று சாப்பிட்டு வரவும். தேவைப்பட்டால், நீங்கள் ஒன்று அல்லது இரண்டு சிப் தண்ணீர் குடிக்கலாம். அதன் பிறகு 30 நிமிடங்கள் வரை நீங்கள் எதையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
உங்களுக்கு டைப்-1 நீரிழிவு அல்லது டைப்-2 நீரிழிவு நோய் இருந்தால், வெந்தய விதைகள் இரண்டு நிலைகளிலும் மிகவும் நன்மை பயக்கும். இது உங்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதுடன் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது.
மேலும் படிக்க...
மனைவியை ஏமாற்ற பாஸ்போர்ட் கிழிப்பு - கைது செய்த போலீஸார்!
பொருளாதாரத்திற்கு இயற்கை விவசாயமும் அடிப்படை - பிரதமர் மோடி!
Share your comments