1. வாழ்வும் நலமும்

மருத்துவ குணங்கள் நிறைந்த கேழ்வரகு

KJ Staff
KJ Staff
  • இந்திய மக்களின் உணவுப் பட்டியலில் நீங்காத இடம் பெற்றவை கேழ்வரகு உணவு வகைகள்.
  • உடல் எடையை குறைப்பதற்கும், உணவு செரிமானத்திற்கும் ஏற்றது கேழ்வரகு உணவுகள்.
  • உடல் எடையை குறைப்பதற்கும், உணவு செரிமானத்திற்கும் ஏற்றது கேழ்வரகு உணவுகள்.
  • கேழ்வரகுவின் தாயகம் எத்தியோப்பியா. இதன் அறிவியல் பெயர் 'எல்லுசீன் குரோகனோ'.
  • வறண்ட நிலங்களிலும், மித வெப்ப பகுதிகளிலும் நன்கு வளரக் கூடியவை.
  • இந்தியாவில் 4000 ஆண்டுகளுக்கு மேலாக கேழ்வரகு பயிரிடப்படுகிறது. இதில் கர்நாடகமும், தமிழ்நாடும் அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன.
  • ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற உலக நாடுகளிலும் கேழ்வரகு பயிராகிறது.
  • கேழ்வரகில் உடலுக்கு சக்தியளிக்கக் கூடிய 'கார்போ ஹைட்ரேட்' பொருட்கள் அதிகமாக காணப்படுகின்றன.
  • புரதம் (7.7 சதவீதம்) மற்றும் நார்ச் சத்து (3.6 சதவீதம்) பொருட்களும் குறிப்பிட்ட அளவில் உள்ளன.
  • 100 கிராம் கேழ்வரகில் 336 கலோரிகள் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.
  • மிகக்குறைந்த கொழுப்புப் பொருட்கள் கொண்டது கேழ்வரகு.
  • 100 கிராம் கேழ்வரகில் 1.3 சதவீதமே கொழுப்புச் சத்து காணப்படுகிறது.
  • உடலுக்கு அத்தியாவசிய தாதுப் பொருட்களான கால்சியம், இரும்பு அதீத அளவில் உள்ளன.
  • நியாசின், தயாமின், ரீபோபிளேவின் போன்ற பி- குழும வைட்டமின்களும் கணிசமாக காணப்படுகின்றன.
  • இவை ஒவ்வொன்றும் வளர்ச்சிதை மாற்றம், சுரப்பிகளின் செயல்பாடுகள் ஊக்குவிப்பு என பல்வேறு உடற்செயல்களில் பங்கு வகிக்கின்றன.
  • கேழ்வரகில் வலைன், ஐசோலியோசின், டிரையோனைன், லியோசின், மீத்தையோனைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளன.
  • இதில் வலைன் அமினோ அமிலம் திசுக்களின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகிறது .
  • உணவு செரிமானத்திற்கும் உதவுகிறது.
  • ஐசோலியோசின் அமிலமானது ரத்த அணுக்கள் உருவாக்கத்திலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன.
  • டிரையோனைன் அமிலங்கள் உடலில் புரதப் பொருட்களை வளப்படுத்தப்படுகின்றன.
  • மேலும் கல்லீரலில் கெட்ட கொழுப்புகளை சேர விடாமல் பாதுகாக்கின்றன.
  • மீத்தையோனைன் அமினோ அமிலம் சருமம் மற்றும் ரோமங்கள் வளர்ச்சிக்கு துணைநிற்கிறது.
  • லிசித்தின் என்ற திரவத்தை சுரக்க உதவுகிறது.
  • இது சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பகுதிகளில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்க வல்லது.
English Summary: Finger millet- health benefits Published on: 10 December 2018, 04:31 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.