அசைவப் பிரியர்களைக் கவர்ந்து இழுக்கும் மீன்களில் தற்போது ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.
சிறந்த கடல் உணவு (Excellent seafood)
உடல் நலத்திற்கு ஏற்ற அசைவ உணவு என்றால் அது கடல் உணவுதான். அதாவது கடலில் இருந்து கிடைக்கும் மீன், இறால், நண்டு உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள்தான்.
அதனால்தான், ரத்த அழுத்தம், நீரழிவு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கும், மீன் சாப்பிடலாம் என மருத்துவர்களும் அறிவுரை வழங்குகின்றனர்.
ரசாயனக் கலப்படம் (Chemical impurity)
இவற்றில் கெட்ட கொழுப்பு இல்லை என்பதுதான் மருத்துவர்கள் தொடர்ந்து பரிந்துரை செய்யவதற்கு மிக முக்கியக் காரணம். அவ்வாறு மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படும் மீன் உணவிலும் தற்போது ரசாயனக் கலப்படம் வந்துவிட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தற்போது மீன் கடைகளில் உடல் ஆரோக்கியத்திற்குக் கெடுதல் விளைவிக்கும் ரசாயனம் கலந்த மீன்களை விற்பனை செய்து வருகின்றனர்.
கண்டுபிடிப்பது எப்படி? (How to find out?)
-
இதை வெறும் கண்களால் காண முடியாது.பார்மலின் கலந்த மீன் மீது எந்த வாசனையும் வராது.
-
ஈக்கள் நெருங்காது. பொதுவாக மீனை அழுத்திப்பார்த்தால் கொஞ்சம் கொஞ்சமாவது அமுங்கிவிடும்.
-
ஆனால் பார்மலின் ரசாயனக் கலப்படம் செய்யப்பட்டுள்ள மீன் கம்பி போல உறுதியாக இருக்கும்.
உறுதி செய்வது எப்படி? (How to make sure?)
-
பார்மலின் ரீஏஜன்ட் டெஸ்ட் கிட் முலமே கண்டுபிடிக்க முடியும்.
-
இந்தக் கிட்டைப் பயன்படுத்தி மீன் மீது, ஒரு சொட்டு மருந்து ஊற்றினால் கலப்படம் இல்லாத மீன்னாக இருந்தால் நிறம்மாறாது.
-
கலப்படம் செய்த மீன் என்றால் இரண்டு நிமிடங்களில் ரோஸ் நிறமாக மாறிவிடும்.
பரிசோதனை கிட் (Testing Kit)
அருகில் உள்ள கெமிக்கல்ஸ் விற்பனை செய்யும் கடைகளில் இந்த டெஸ்டிங் கிட் (Kit) விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ருபாய் 400 மட்டுமே.
இந்த கிட்டைக் கொண்டு 300 பரிசோதனைகளைச் செய்து பார்க்க முடிவும்.
புகார் அளிக்க
கலப்படம் மீன் தொடர்பாக 9444042322என்ற எண்ணில் புகார் செய்யுங்கள் அல்லது வாட் சாப் பதிவிடலாம்.
எனவே மீனில் உள்ள கலப்படத்தைக் களைந்து, கலப்படம் இல்லாத மீன்களை, நஞ்சு இல்லாத மீன் வகைகளை உட்கொள்வோம். ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்வோம்.
தகவல்
அக்ரி சு சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289
மேலும் படிக்க...
நீங்கள் நத்தை சாப்பிடுவதற்கு 5 அற்புதமான காரணங்கள்
பீட்ரூட்டின் பக்க விளைவுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பண்புகள்
Share your comments