1. வாழ்வும் நலமும்

தொற்று நோய்களைப் பரப்பும் ஈக்கள்- விரட்டுவது எப்படி?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

மழைக்காலங்கள் வந்துவிட்டாலே வீடுகளில் ஈக்கள் மொய்க்கத் தொடங்கிவிடும். அதிலும் பழங்கள் ஏதேனும் வைத்திருக்கும் இடங்களில் அவை படுத்தும் தொல்லைக்கு அளவே இல்லை. கைகளுக்கும் சிக்காது. ஆனால், நம்மைச் சீண்டிக்கொண்டே இருக்கும். ஆக நம் இல்லங்களில் பெருந்தொல்லையாக உள்ள ஈக்களை விரட்டும் நுட்பங்கள் பற்றிப் பார்க்கலாம்.

ஈக்கள் தொல்லை

தற்போது தொடர் மழை பரவலாக இருப்பதால் எங்கு பார்த்தாலும் ஈக்களின் ரீங்கார சப்தம் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அதுவும் அருகில் கோழிப்பண்ணை இருந்தால் ஈக்களின் தொந்தரவுக்கு அளவே இல்லை.

நோய்களுக்கு வித்திடும் (Sowing diseases)

  • உலக அளவில் 120மில்லியன் ஈக்கள் உள்ளன. அவை முழுமையாக வளரும் வரை உருவத்தில் மாற்றமடைந்து கொண்டே இருக்கும்.

  • வீடுகளில் காணப்படுகின்ற ஈக்கள் (மஸ்கா டொமஸ்டிகா) என்று அழைக்கப்படுகின்றன.

  • இவை மனிதனைக் கடிக்காமல் காலரா, வயிற்றுப் போக்கு, டைபாய்டு போன்றத் தொற்று நோய்களைப் பரப்புகின்றன.

வகைகள்

ஈக்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் கடிக்கும் ஈக்கள்,குருட்டு ஈக்கள், கொம்பு ஈக்கள் ஆகியவை முக்கியமானவை.இந்த ஈக்கள் கால்நடைகளின் இரத்தத்தை உறிஞ்சு அவற்றுக்குப் புண் மற்றும் இரத்த சோகையை உண்டாகின்றன.

வாழ்விடம்

ஈக்கள் உருவாவதற்கு நாமேக் காரணம். அதாவது திறந்து வைக்கப்பட்டிருக்கும், குப்பைகள் மற்றும் கழிவுகள்தான் ஈக்களுக்கு சொர்க்கம்.

விரட்டும் வழிகள் (Ways to drive away)

  • காலியானப் ப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலில் 100 மி.லி தண்ணீரில், சிறிய கருவாட்டுத் துண்டைப் போட்டு வைத்தால், அந்த வாசனைக்கு ஈக்கள் உள்ளே சிக்கி மடியும்.

  • இந்த முறையில் மாட்டு ஈ மற்றும் பழங்களை தாக்குகின்ற பழ ஈக்களையும் கட்டுப்படுத்த முடியும்.

  • கற்பூரத்தை ஏற்றி ஈக்கள் தங்கியுள்ள இடங்களில் காட்டினால், அதன் நறுமணத்திற்கு உடனடியாக ஓடி விடும்.

  • சிலவகைச் செடிகளை நம் வீடுகளில் வளர்த்தால், ஈக்களை துவம்சம் செய்ய முடியும். அதாவது ஓமம், துளசி, புதினா, சாமந்தி ஆகியச் செடிகளை நம் வீடுகளில் வளர்ப்பதால் ஈக்களை விரட்டியக்க இயலும்.

  • நம் வாழ்விடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள குப்பை கூளங்கள் அடிக்கடி அதேங்கியுள்ள இடங்களில் தண்ணீரை கற்ற வேண்டும்.

  • தண்ணீர் வடித்து விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தகவல்
அக்ரி சு.சந்திர சேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை

மேலும் படிக்க...

தினமும் கீரை சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் - மக்களே உஷார்!

பட்டாசு வடிவில் சாக்லேட்டுகள்- தீபாவளியையொட்டி விற்பனை!

English Summary: Flies that spread infectious diseases - how to repel? Published on: 07 November 2021, 10:34 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.