கோடை காலத்தில் தவிர்க்க முடியாத விஷயம் என்றால் உடல் வெப்பம். என்னதான் வெயிலில் செல்வதை தவிர்த்தாலும் உடல் உஷ்ணத்தை சமாளிப்பது என்பது கடினமாக உள்ளது. இந்த சமயத்தில் உணவு முறையில் நாம் மிகவும் கவனம் கொள்ளவேண்டும். மேலும் உடல் உஷ்ணத்தை தாங்க முடியாதவர்கள் இந்த உணவுகளை தவிர்ப்பது மிகவும் முக்கியமாகும்.
வெயில் காலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணம், சரும பிரச்சனை, பருக்கள், உடல் சோர்வு, மயக்கம், சிறுநீர் போக்கில் பிரச்சனை, உடலில் தண்ணீர் பற்றாக்குறை. இவை அனைத்தையும் சமாளிக்க நம் உணவில் கவனம் கொள்ள வேண்டும். கோடை காலத்தில் சாத்வீக உணவுகளை கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
ஆடு, கோழி, மீன், இறைச்சிகளால் உடலில் வெப்பம் அதிகரிக்கும். மேலும் ரோட்டோர கடைகளில் விற்கும் பொரித்த இறைச்சி உணவுகளை தவிர்ப்பது அவசியம்.
கார உணவுகளை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. உணவுகளில் காரத்தை குறைவாகவே சேர்ப்பது உடலில் வெப்பத்தை அதிகரிப்பதை கொடுப்பதும். கார உணவால் உடலில் ஒவ்வாமை, பருக்கள், உண்டாகும். பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை போன்ற உணவுப்பொருட்களை சற்று தள்ளி வைப்பது நல்லது.
எண்ணெய் பொருளால் செய்யப்பட்ட உணவுகள் வாயுத் தொல்லையும் உண்டாக்கும். உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். மேலும் செரிமான பிரச்சனை உள்ளவரக்ள வெயில் காலத்தில் இவ்வகை உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
காபி, டீ தேநீர் குடிப்பதை குறைத்துக்கொள்ளவும்.
கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவு பொருட்கள், இனிப்பு அதிக சேர்க்கப்பட்ட பலகாரங்கள் உடலில் கொழுப்பை அதிகரிக்கச்செய்து உடலில் சோர்வு மற்றும் சோம்பலை உண்டாக்கும்.
ஐஸ் தண்ணீரில் உள்ள குளிர்ச்சியானது ரத்தக் குழாய்களை சுருக்கி, உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது. மேலும் ஐஸ் கட்டி, குளிர்ச்சி அதிகம் உள்ள தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
பாஸ்ட் புட் உணவை வெயில் நேரத்தில் அறவே உட்கொள்ள கூடாது. உணவில் மசாலாக்கள் அதிகம் சேர்ப்பதை தவிர்க்கவும். மசாலாக்கள் உடலில் வயிற்று கோளாறை உண்டாக்கி வயிற்று போக்கை அதிகரித்து விடும்.
k.sakthipriya
krishi jagran
Share your comments