சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய் வந்துவிட்டால், இனிப்பை அறவே துறக்க வேண்டும் என்பது கூறப்படுகிறது. ஏன் இனிப்புகளின் அருகில் போவதையேத் தவிர்க்க வேண்டும் என்பதை குடும்ப உறுப்பினர்கள் ஆலோசனை கூறுவார்கள். இனிப்புக்கு இப்படியொரு கதை என்றால், பழங்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம். எல்லாப் பழங்களிலும் இனிப்பு இருக்கிறதே, சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என் சந்தேகம் நம் அனைவருக்குமே இருக்கும்.
ஆனால், சர்க்கரை நோயாளிகள் சிலப் பழங்களைச் சாப்பிடுவதால் தவறில்லை. அதிலும் குறிப்பிட்டப் பழங்களைக் கட்டாயம் சேர்த்துக்கொள்வது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். அவ்வாறு நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருக்கும்போது நல்ல நோயெதிர்ப்பு சக்தி உள்ள இந்தப் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
ஆரஞ்சு
சிட்ரஸ் பழமான இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்தப் பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
அவகோடா
வெண்ணெய் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலம்தான் அவகோடா. இதில் நார்ச்சத்தும் அதிகம் என்பதால், நீரிழிவு அபாயத்தைக் குறைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பப்பாளி
பப்பாளியில் இயற்கையான ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சரியான தேர்வாக அமைகிறது.
ஆப்பிள்
ஆப்பிள் சத்தானவை மட்டுமல்ல; ஒரு ஆய்வின்படி, மிதமாக உட்கொண்டால், அவை டைப் 2 நீரிழிவு நோய் பிரச்னையை குணப்படுத்தும் குணம் கொண்டவையாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை பார்க்க வேண்டாம் என்றப் பழைய பழமொழியில் ஒரு உண்மை இருக்கிறது.
மேலும் படிக்க...
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 - அமைச்சர் தகவல்
தேர்த்திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து விபத்து - 11 பேர் உடல் கருகி பலி!
Share your comments