பயன்படுத்திய சமையல் எண்ணெய், (Cooking oil) உலகெங்கும் பல லட்சம் லிட்டர்கள், தினமும் வீணடிக்கப்படுகின்றன. அதை மறு சுழற்சி செய்ய பல உத்திகள் இருந்தும் இது தொடர்கிறது. இந்த நிலையை மாற்ற, ஆஸ்திரேலியாவின் ஆர்.எம்.ஐ.டி.யை (R.M.I.T.) சேர்ந்த விஞ்ஞானிகள், ஒரு புதிய பொருளை உருவாக்கியுள்ளனர்.
கிரியா ஊக்கி
இது ஒரே நேரத்தில் கிரியா ஊக்கியாகவும், நுண்வடிகட்டியாகவும், கடற்பஞ்சு போன்ற உறிஞ்சியாகவும் செயல்படுகிறது.இதனால், ஒரு பக்கம் கசடு மிக்க சமையல் எண்ணெயை செலுத்தினால், அது பல்வேறு வேதி வினைகளுக்கு உள்ளாகி, சுத்திகரிக்கப்பட்டு, குறைந்த கரிமச் செறிமானம் கொண்ட உயிரி டீசல் திரவமாக வெளியே வருகிறது.
தற்போது பரிசோதனையில் உள்ள இந்த வித்தியாச மான நேனோ வடிகட்டி, அடுத்து விவசாயக் கழிவுகள் (Agricultural Waste), ரப்பர் கழிவு, நுண் பிளாஸ்டிக் கழிவு (Plastic Waste) போன்றவற்றையும் வடித்தெடுக்கும்படி செய்யலாம் என ஆர்.எம்.ஐ.டியின் ஆராய்ச்சி யாளர்கள் கூறியுள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சூரியகாந்தி விதைகள்!
27,500 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி! தூத்துக்குடி துறைமுகம் வந்தது!
Share your comments