தங்கள் போராட்டத்தை முடக்க நினைத்தால், நெல் உள்ளிட்ட தானிய மூட்டைகளை அரசு அலுவலகங்களில் குவித்துவிடுவோம், என விவசாய சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடரும் போராட்டம் (The struggle to continue)
வேளாண் திருத்தச் சட்டமசோதாக்களைத் திரும்பப் பெற வலியுறுத்திப் பல மாதங்களாகத் தலைநகர் டெல்லியின் எல்லைககளை விவசாயிகள் முற்றுகையிட்டுப் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று வருகின்றனர்.
பிரதமரைச் சந்திக்க முயற்சி (Trying to meet the Prime Minister)
விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுடன் அரசு நடத்திய பல கட்டப் பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இதனால், ஓராண்டுக்கு மேல் நடைபெறும் இந்த போராட்டத்துக்கு இன்னும் முடிவு காணப்படவில்லை. விவசாய சங்கங்கள் பிரதமர் மோடியை நேரில் சந்திக்கத் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
கடும் அதிருப்தி (Severe dissatisfaction)
இந்நிலையில், பாரத் கிஸான் யூனியன் என்கிற இந்திய விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் டிக்கிட் தற்போது இதுதொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியின் எல்லையில் விவசாயிகள் போராட்டத்தின்போது போடப்பட்ட தடைகள் மற்றும் சிமெண்ட் கற்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.
காசிப்பூர், டிகிரி மாவட்டங்களில் போலீஸார் மேற்கொண்ட இந்த செயலால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நெல் மூட்டைகள் (Paddy bundles)
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிந்தியில் பதிவிட்ட ராகேஷ், விவசாயிகள் போராட்டத்தை முடக்க நினைத்தால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் நெல் மூட்டைகளை இறக்கி வைத்து விடுவோம்,'' என்று எச்சரிக்கை பதிவு செய்துள்ளார்.
அரசு தரப்பு வாதம் (Government argument)
ஆனால் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் தான் இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதனால் போராட்டத்தைக் கைவிட்டு, மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமாகப் பேச விவசாய அமைப்புகள் முன்வர வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
Share your comments