1. வாழ்வும் நலமும்

12 முதல் 14 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி - மார்ச் மாதம் தொடக்கம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Govt Vaccine for 12- to 14-Year-Olds - Beginning in March!

மார்ச் மாதம், 12 முதல் 14 வயது சிறார்களுக்கு கொரோனாத் தடுப்பூசி போட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

கொரோனாத் தடுப்பூசி (Corona vaccine)

உலக நாடுகளை உலுக்கி எடுத்துவரும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்று, மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தொற்றில் இருந்து நாம் தப்பிக்க,கொரோனாத் தடுப்பூசி மட்டுமேத் தீர்வு என மத்திய- மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. அதுமட்டும் அல்லாமல், நாட்டு மக்களை நோய்த் தொற்றில் இருந்துக் காக்கும் நடவடிக்கையாக, இலவசத் தடுப்பூசி முகாம்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்த முகாம்களுக்கு மக்களும் ஆர்வத்துடன் வந்து, தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர். இதனால், அச்சம் ஓரளவுக்கு குறைந்து வருவதுடன், உயிருக்கு ஆபத்து இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது.

தடுப்பூசி (Vaccine)

இந்நிலையில் தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், 45 வயதிற்கு உட்பட்டவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆகியோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு விட்டன.

இதைத்தொடர்ந்து இந்த மார்ச் மாதம் முதல் 12 முதல் 14 வயது சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி (Covid Vaccine) வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மார்ச் முதல் (From March)

இதன்படி, தடுப்பூசி.பாதுகாப்பு இயக்கம் மேலும் விரிவடைகிறது. 2022 மார்ச் மாதம் முதல் 12 முதல் 14 வயது சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி போடப்படும். கொரோனாவுக்கு எதிரானப் போராட்டத்தில் இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் பெரும் பலத்தைச் சேர்த்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பலம் சேர்ப்பு

தடுப்பூசி இயக்கத்தின் ஓராண்டு நிறைவையொட்டி, தடுப்பூசி இயக்கத்தில் தொடர்புடைய ஒவ்வொரு தனிநபரையும் தான் வணங்குவதாகப் பிரதமர் நரேந்திர  மோடி தெரிவித்தார்.

தடுப்பூசி இயக்கத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பங்கை பாராட்டிய பிரதமர், கோவிட்-19க்கு எதிரான போராட்டத்திற்கு இந்தியாவின் தடுப்பூசி திட்டம் பெரும் பலத்தைச் சேர்த்துள்ளது என்றார்.

மேலும் படிக்க...

பூஸ்டர் தடுப்பூசி பெயரில் புதிய மோசடி: மக்களே உஷார்!

முகக் கவசத்தின் அவசியம்: ஆட்டோ டிரைவர் விழிப்புணர்வு!

English Summary: Govt Vaccine for 12- to 14-Year-Olds - Beginning in March! Published on: 17 January 2022, 10:34 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.