கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், இப்போதே வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. வெயில் காலங்களில் நம் உடலின் பாதுகாப்பு அரணான தோலைப் (Skin) பாதுகாக்க வேண்டியது நம் தலையாயக் கடமை. கோடை காலத்தில் சூரியனிடமிருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்களின் (ultraviolet rays) தாக்கம் அதிகளவில் இருக்கும். இக்கதிர்களிடம் இருந்து, நம் தோலினை பாதுகாக்க பல்வேறு கட்ட ஆய்வு முடிவுகளின் படி தற்போது தீர்வு கிடைத்துள்ளது.
தோலைப் பாதுகாக்க திராட்சை:
திராட்சைப் பழங்களை (Grapes) உட்கொண்டால் சூரியனில் இருந்து வெளியாகும் புறஊதாக் கதிர்களில் இருந்து தோலைப் பாதுகாக்க முடியும் என ஆய்வாளர்கள் (Analysts) தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அலபாமா பல்கலைக்கழகத்தில் உள்ள American Academy of Dermatology என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், திராட்சைப்பழங்களில் காணப்படும் பாலிபினால்கள் (Polyphenols), தோல் மற்றும் தசைகளைப் பாதுகாக்கும் என தெரியவந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 2 கோப்பை திராட்சை ஜூஸ் (Grapes Juice) சாப்பிடுவதால் புறஊதாக் கதிர்கள் மூலம் தோல் பாதிக்கப்படுவது வெகுவாகக் குறைவது கண்டுபிடிக்கப்பட்டது. திராட்சையால் தோல்களில் உள்ள செல்கள் இறப்பு (Cell death) குறைவதும் தெரியவந்துள்ளது.
திராட்சைப் பழங்களை உண்பதன் மூலம் எண்ணற்ற பயன்கள் நமக்கு கிடைத்தாலும், கோடை காலத்தில் சூரியனிடமிருந்து நம் தோலைப் பாதுகாக்க (Skin Protection) தற்போது திராட்சை பழங்கள் உதவுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பது, திராட்சை பழ விவசாயிகளுக்கு மட்டுமல்லாது பொதுமக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மார்ச் மாதத்தில் வாழை விலை என்னவாக இருக்கும்? வேளாண் துறை கணிப்பு!
Share your comments