1. வாழ்வும் நலமும்

சரும பிரச்சனைகள் இருக்கா? இந்த 6 இலைகள் போதும்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Have skin problems? These 6 leaves are enough

சோப்பு, தண்ணீர், ஆடை என எல்லாவற்றாலும் சருமப் பிரச்னை உருவாக வாய்ப்பு உள்ளது. அதிலும் சென்ஸிடிவ் ஸ்கின் எனப்படும் சருமத்திற்கு, எப்போது வேண்டுமானாலும் இந்த சருமப் பிரச்னை ஏற்படலாம்.

சருமப் பிரச்னை (Skin problem)

அதிலும் குறிப்பாகக் குளிர்காலம் வந்துவிட்டால், சருமப் பிரச்னைகளும் தாறுமாறாகத் தலைதூக்க ஆரம்பித்துவிடும். அவ்வாறு அவதிப்படுவரா? நீங்கள். அப்படியானால், இந்தத் தகவல் உங்களுக்குதான்.

ரசாயனங்கள் கொண்ட சரும பராமரிப்பு பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், சருமம் தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தழும்புகள், சுருக்கங்கள் மற்றும் முகப்பரு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு எளிதாகக் கிடைக்கும் இந்த 6 இலைகள் போதும். செலவும் மிக மிகக் குறைவுதான்.

வெந்தயக் கீரை (Fenugreek)

  • முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை நீக்க வெந்தய கீரையை பயன்படுத்தலாம்.

  • வெந்தய இலைகளை அரைத்து அதில் 2 டீஸ்பூன் தேன் கலந்து கொள்ளவும்.

  • முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊற விடவும்.

  • அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவவும்.

புதினா (Mint)

  • புதினா இலைகளில் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன.

  • இதன் இலைகளை அரைத்து வெள்ளரிச்சாறு மற்றும் தேன் கலந்து தடவவும்.

  • முகத்தில்பூசி 15 நிமிடங்கள் ஊற விடவும்.

 

  • அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.

துளசி (Basil)

  • துளசி இலைகளை அரைக்கவும்.

  • அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

  • இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் ஊற விடவும்.

  • பிறகு முகத்தை சுத்தமானக் குளிர்ந்த நீரில் கழுவவும்.

கறிவேப்பிலை (Curry leaves)

  • கறிவேப்பிலை ஃபேஸ் பேக் உங்கள் சருமத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • இதற்கு முதலில் கறிவேப்பிலை பேஸ்ட்டை தயார் செய்து, அதில் சிறிது முல்தானி மிட்டி மற்றும் தேன் சேர்க்கவும்.

  • முகத்தில் பூசி 15 நிமிடங்கள் ஊற விடவும்.

  • அதன் பிறகு சுத்தமான நீரில் முகத்தை கழுவவும்.

கொத்தமல்லி (Coriander)

  • கொத்தமல்லி இலைகளை அரைத்து பேஸ்ட் தயார் செய்து, அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

  • முகத்தில் பூசி சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் ஊற விடவும். இது முகப்பரு மற்றும் முகப்பரு பிரச்சனையை நீக்கும்.

வேப்ப இலை (Neem)

  • வேப்ப இலையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

  • எந்த வகையானத் தொற்றுநோயையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது வேம்பு.

  • 10 முதல் 15 வேப்ப இலைகளை எடுத்து பேஸ்ட் தயாரித்து ரோஸ் வாட்டரில் கலந்து தடவவும்.

  • முகத்தில் பூசி 15 நிமிடங்கள் ஊற விடவும். அதன் பிறகு சுத்தமான நீரில் முகத்தை கழுவவும்.

  • எனவே இந்த 6 இலைகளைப் பயன்படுத்தி சருமப் பிரச்னைகளுக்கு குட்பை சொல்வோம்.

மேலும் படிக்க...

அந்த விஷயத்திற்கு ஏற்ற இதமானப் பானங்கள்!

இதயப் பாதிப்புகளைக் குறைக்க இரவு 10 மணி தூக்கமே சிறந்தது!

எச்சரிக்கை!

English Summary: Have skin problems? These 6 leaves are enough Published on: 06 December 2021, 07:46 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.