கொரோனா தடுப்பூசி போட்டுகொண்ட நபர்களுக்கு சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஒரு சிறப்பு டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த திட்டத்திற்கு இம்யூன் இந்தியா டெபாசிட் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.
கொரோனா 2வது அலை
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பரவலின் 2-வது அலை மீண்டும் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் மக்கள் நோய் தாக்குததில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள தடுப்பூசி போடுமாறு அரசாங்கம் மக்களை வலியுறுத்துகிறது.
இம்யூன் இந்தியா டெபாசிட் திட்டம்
இந்நிலையில், அரசு வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா புதிய டெபாசிட் திட்டத்தை அறிவுறுத்துள்ளது. இத்திட்டத்துக்கு இம்யூன் இந்தியா டெபாசிட் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.
கூடுதலாக 0.25% வட்டி
இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால் கூடுதலாக 0.25% வட்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் 1111 நாட்கள். சீனியர் சிட்டிசனாக இருந்தால் இன்னும் கூடுதல் வட்டி கிடைக்கும்.
எனவே, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பொதுமக்களும், தடுப்பூசி போடாத மக்கள் உடனடியாக போட்டுக்கொண்டும் இந்த சலுகையை பெற்றுக்கொள்ளும்படி சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. இது குறுகிய கால சலுகை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க....
LIC-யின் இந்த திட்டம் உங்களுக்கு இரட்டை நன்மையை வழங்குவதுடன் சிறந்த வருவாயையும் தரும்!
மாதந்தோறும் ரூ.10,000 வேணுமா? SBI வங்கியின் இந்தத் திட்டத்தில் இப்பவே சேர்ந்திருங்க!!
Share your comments