1. வாழ்வும் நலமும்

முந்திரி பால் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்

KJ Staff
KJ Staff

அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களின் ஆதாரம்

முந்திரி பாலில் ஒமேகா 6 உள்ளிட்ட அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. இவை ஆரோக்கியமான தோலுக்கு வழிவகை செய்கின்றன. அத்துடன் உடலில் உள்ள கொலஸ்ராலின் அளவினை கட்டுக்குள் வைக்கின்றன.

இரத்த அழுத்தத்தை சீராக வைக்க

முந்திரி பாலில் காணப்படும் மெக்னீசியம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

இரத்த அழுத்தம் சீரானால் இருதய நோய்கள் வராமல் தடுக்கலாம். இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தம் சீராக இருக்க உதவுகிறது.

இதய நலத்திற்கு

முந்திரி பாலானது இதய நலத்தினை மேம்படுத்துகிறது. முந்திரி பாலில் ஆலிவ் எண்ணெயில் உள்ளது போன்று ஒலியிக் அமிலம் காணப்படுகிறது.

ஒலியிக் அமிலமானது இதய நோய்களுக்கு காரணமான டிரைகிளிசரைடுகளின் அளவினைக் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே முந்திரி பாலினை அளவோடு உண்டு இதய நலத்தை பேணலாம்.

ஆரோக்கியமான எலும்புகளைப் பெற

முந்திரி பாலில் உள்ள மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளின் உருவாக்கம், வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் இதில் உள்ள கால்சியம் எலும்புகளைப் பலப்படுத்துகிறது.

 எளிதாக செரிமானம் ஆக

முந்திரி பாலானது விலங்குகளிடமிருந்து பெறப்படும் பால் மற்றும் தயிரினைவிட எளிதில் செரிமானம் ஆகிறது. ஏனெனில் பாலில் உள்ளது போன்று லாக்டோஸ் மற்றும் கேசின் புரதம் இதில் காணப்படுவதில்லை. எனவே இது எளிதில் செரிமானம் ஆகும்.

பித்தநீர்கட்டியைத் தடுக்க

பித்தநீர்கட்டி ஏற்படுவதை முந்திரி பாலானது தடை செய்கிறது.

மனஅழுத்தத்தைக் குறைக்க

முந்திரி பாலானது மனஅழுத்தத்தைக் குறைக்கும் மருந்தாகச் செயல்படுகிறது. முந்திரி பாலில் உள்ள எல் டிரிப்தோபன் என்ற அமினோ அமிலமானது நமது உடலில் செரிடோனின் மற்றும் நியாசின் வேதிச் சேர்மமாகப் பிரிக்கப்படுகிறது. இவ்வேதிச் சேர்மங்கள் மனஅழுத்தத்தைக் குறைத்து மனஅமைதியை ஏற்படுத்துகின்றன.

ஆரோக்கியமான சருமத்திற்கு

முந்திரி பாலில் உள்ள அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் சரும ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இக்கொழுப்பு அமிலங்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்குவதோடு சரும அரிப்பு, எரிச்சல், முன்கூட்டிய முதிர்ச்சி ஆகியவற்றை தடுக்கின்றன.

மேலும் இப்பாலில் உள்ள செம்புச்சத்து சருமம் மற்றும் கேச நிறத்திற்கு காரணமான மெலானின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் செம்புச்சத்து சரும நெகிழ்ச்சி மற்றும் சரும முதிர்ச்சியைத் தடுத்தல் ஆகியவற்றிற்குக் காரணமான கொலாஜன் உற்பத்திக்கும் காரணமாகிறது. எனவே முந்திரி பாலினை உண்டு ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம்.

முந்திரி பாலானது சூப்புகள், சாலட்டுகள், ஐஸ்கிரீம்கள், குழம்பு வகைகள், காப்பி, டீ ஆகியவை தயாரிக்கும்போது சேர்க்கப்படுகிறது.

English Summary: Health benefits of Cashew Milk Published on: 09 November 2018, 11:48 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.