எள் (Sesame) உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. தினந்தோறும் நாம் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். அதனை விரைவிலேயே நம்மால் உணர்வும் முடியும். வைட்டமின் பி1 (Vitamin B1)), பி6, நியாசின், தையாமின், ஃபோலிக் அமிலம் (Folic Acid), ரிபோபிளேவின் போன்ற வைட்டமின்கள் எள்ளில் அபரிதமான அளவில் உள்ளது. இது நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு தேவையோ அதில் 25 சதவித தேவையை பூர்த்தி செய்கிறது.
எள்ளின் பயன்கள்
- சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது
- எலும்பு அடர்த்தியை பராமரிக்கிறது.
- எலும்பு தேய்மானம் (Bone Depreciation) ஏற்படாமல் தடுக்கிறது.
- கொழுப்பின் (Fat) அளவை குறைக்கிறது.
- இரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது.
ஒரு கப் பாலில் உள்ள கால்சியச் (Calcium) சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் (Sesame Choclate) சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்து விடும்.
மூட்டு வலி உள்ளவர்களுக்கு வலியையும், வீக்கத்தையும் எள் குறைக்கிறது. எள்ளில் உள்ள செம்பு சத்து, கால்சியச் சத்து, மக்னீசியம் சத்து போன்றவை மூட்டுகளின் ஜவ்வுகளுக்கு தேவையான பலத்தை கொடுக்கிறது.
எள்ளில் உள்ள செம்புச்சத்து இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை அதிகப்படுத்துகிறது. இதனால் இருதய (Heart) சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.
நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க
மாதவிடாய் வருவதற்கு முன் உடலில் ஏற்படும் மாற்றங்களான வயிறு உப்புசம், மார்பகங்களில் வலி, தலை வலி, உடல் கனத்து போதல் போன்றவை எள் சாப்பிடுவதால் குறைகிறது. மாதவிடாய் வந்த 15 நாட்களுக்கு பின் எள்ளை உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த மாதவிடாய் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.
எள்ளில் Phytpsterol என்ற வேதிப்பொருள் அதிகம் உள்ளது. அதாவது 400 - 413 மி. கி அளவு 100 கிராம் எள்ளில் உள்ளது. இது மற்ற எந்த விதைகள் கொட்டைகளின் அளவை விட அதிகம். இவை இரத்தத்தில் கொலஸ்ட்ரால் (Cholesterol) அளவை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு திறனை (Immunity) அதிகரிக்க செய்கிறது. மேலும் பல விதமான புற்று நோய் (Cancer) வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.
மேலும் படிக்க
சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களுக்காக நச்சுன்னு 4 டிப்ஸ!
பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு! மேலும் பல பயன்கள் அறிவோம்
Share your comments