இரத்தசோகை என்னும் நோய் இருப்பதை ஆரம்ப காலக் கட்டத்தில் கண்டறிவதன் மூலம் அதனால் ஏற்படும் விபரீத விளைவுகளை தடுத்து எளிதில் குணமாக்கி விடலாம்.
நம் ரத்தத்தில் சிவப்பு அணுக்களில் ஏற்படும் குறைபாடே ரத்த சோகை எனப்படுகிறது. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் என்னும் நிறமிகள் உள்ளன. நம் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனைத் திசுக்களுக்கு எடுத்துச்செல்வதே இவற்றின் பணியாகும்.
அவ்வாறு, நம் ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து, இதன்மூலம் ஹீமோகுளோபினின் செயல்பாடுகளும் குறைந்து, ஆக்ஸிஜன் எடுத்துச்செல்லப்படுவது தடை படும் நிலை ஏற்பட்டால், ரத்த சோகை ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம். இந்த ரத்தசோகையால் பெரியவர்கள் பாதிக்கப்படும் போது அதனை எளிதில் கண்டுபிடித்துவிடுகிறோம். ஆனால், குழந்தைகளில் இதனைக் கண்டுபிடிப்பது கடினமாகவே உள்ளது.
அறிகுறிகள்
-
இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காயங்கள், பழுதடைந்த திசுக்கள் குணமாக தாமதமாகும்.
-
உடல்நலக் குறைவு அடிக்கடி உண்டாகும். சிவப்பு இரத்த அணுக்களால் ஆன்டிபாடிகளை எடுத்துச் செல்ல முடியாததால் குழந்தைகளுக்கு எளிதாக தொற்று ஏற்படும்.
-
காயங்கள் குணமடைய தாமதமாகி, நாட்கணக்கில் காயங்களுடன் இருக்க வைக்கிறது.
-
இரத்தசோகையுடைய குழந்தைகள் எளிதாக உடல் சோர்வடைவர்.
-
அவர்களுக்கு தூக்க கலக்கம், லேசான தலைசுற்றல், வேகமான இதய துடிப்பு, மூச்சு திணறல் அல்லது மூச்சிறைப்பு போன்றவை ஏற்படலாம்.
மருத்துவப் பரிசோதனை
இரத்தசோகையால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை மேற்கூறிய அனைத்து அறிகுறிகளையும் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. ஆனால் இதில் ஏதாவது ஒன்று காணப்பட்டால் கூட கண்டிப்பாக அக்குழந்தையை குழந்தை நல மருத்துவரிடம் கூட்டிச்சென்று, இரத்தசோகை இருப்பதற்கான மருத்துவ பரிசோதனை செய்து கண்டுப்பிடித்தல் அவசியம். இரத்தசோகை பல காரணங்களால் உண்டாவதால், அந்நோயின் தீவிரத்தை பொறுத்து மருத்துவர் அதற்கான பரிசோதனை முறையை பரிந்துரை செய்வார்.
முழுமையான இரத்த எண்ணிக்கை பரிசோதனை, இரத்த ஸ்மியர் பரிசோதனை, இரும்புச்சத்து பரிசோதனை, ஹீமோக்ளோபின் எலக்ட்ரோப்ஹோரெசிஸ், எலும்பு மஜ்ஜை ஆஸ்பிரேஷன் மற்றும் திசு பரிசோதனை போன்றவைகளால் இந்த நோயை கண்டறிய முடியும்.
இரத்தசோகை என்னும் நோய் இருப்பதை ஆரம்ப காலக் கட்டத்தில் கண்டறிவதன் மூலம் அதனால் ஏற்படும் விபரீத விளைவுகளை தடுத்து எளிதில் குணமாக்கி விடலாம்.
மேலும் படிக்க...
Share your comments