1. வாழ்வும் நலமும்

பால் பாக்கெட் மூலம் கொரோனா பரவாமல் தடுப்பது எப்படி? - பயனுள்ள சில டிப்ஸ்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Credit: The Hindu

நாடே கொரோனா தொற்றில் சிக்கி சின்னாபின்னமாகிவரும் நிலையில், பரவலைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வது மிக மிக அவசியமாகிறது.

முகக்கவசம் அணிவது, கையுறை அணிந்துகொள்வது போன்றவை நோயில் இருந்து நம்மைத் விலக்கி வைக்க இயலும்.

இருந்தாலும் நம்முடைய அத்யாவசியப் பொருட்களில் ஒன்று பால். அதாவது நம் பிறப்பு முதல் இறப்பு வரை நம்மில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. அதனால் அது அத்யாவசிய மற்றும் கட்டாயத் தேவையான ஒன்றாகும்.

இந்த பால் பாக்கெட், நம் வீட்டை வந்தடைவதற்குள் பலரது கைகளைக் கடந்து நீண்ட பயணத்தை மேற்கொள்கிறது. அதனால், பால் பாக்கெட் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

Credit: Kingpng

FSSAI வழிமுறைகள்

அவ்வாறு பால் பாக்கெட் மூலம் கொரோனா தொற்று பரவாமல் தடுத்து, நம்மைத் தற்காத்துக்கொள்வதற்காக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையமான (Food Safty and Standards Authority of India) (FSSAI) சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

1.முதலில் பால்போடும் நபருக்கும், வாங்கும் நபருக்கும் இடையே குறைந்த பட்ச இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

2.இருவரும் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயம்.

3. வாங்கிய பால்பாக்கெட்டை உடனே தண்ணீரில் போட்டு நன்கு சுத்தம் செய்யவும்.

4. பிறகு, உங்கள் கைகளை நன்கு சோப்பு மற்றும் தண்ணீர் போட்டுச் சுத்தம் செய்துவிட்டு பால் பாக்கெட்டை எடுக்கவும். அதற்கு முன்பு பாக்கெட்டின் வெளிப்புறத்தில் இருந்த தண்ணீர் காய்ந்துவிட்டதை உறுதி செய்து கொள்ளவும்.

5. பாக்கெட்டை கட் செய்து (Cut) பாலை பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கவும். நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு ஓரளவுக்கு சூடு குறைந்ததுடன் பாலைப் பருகவும்.

Credit:doc2Us

பாலின் மருத்துவப் பயன்கள்( Medical benefits)

கால்சியம் சத்து (Calcium)

பாலில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால், எலும்புகளுக்கு மிகவும் நல்லது. 250 மி.லி பால் பருகினால், 285 மி.கி கால்சியம் நம் உடலுக்கு கிடைக்கிறது.

சத்துக்கள் நிறைந்தது (Nutrients rich )

புரதச்சத்து, A, B1, B2, B12, D போன்ற வைட்டமின் சத்துக்கள், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் பாலில் அதிக அளவில் இருக்கிறது.

சக்தி பெற உதவும்(Energy Drink)

உடற்பயிற்சி மேற்கொண்ட பிறகு பால் பருகுவதால், நாம் இழந்த அனைத்து சத்துக்களையும் திரும்ப பெற முடியும். அதுமட்டுமல்லாமல், சதை வளர்ச்சிக்கும் பால் உதவுகிறது.

எடை குறைப்புக்கு (Weight Loss)

பாலில் உள்ள லினோலெனிக் அமிலம் (linolenic acid) உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்க உதவுகிறது.

எலும்புகளுக்கு உறுதி (Bone Strength)

பாலில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் D, எலும்பிற்கு மிகுந்த வலிமையையும், உறுதியையும் தருகிறது. தினமும் பால் பருகுவதால், எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி(Immunity)

பாலில், மஞ்சள் தூள் கலந்து பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மேலும் படிக்க...

ஆயிரம் இதழ்களுடன் கூடிய அரிய வகை தாமரை - தாமரைப்பிரியரின் முயற்சிக்கு அமோக வெற்றி

வெறும் 5ஆயிரம் மூதலீட்டில், அஞ்சலக முகவராக வாய்ப்பு - எளிய வழிமுறைகள்!

English Summary: How to prevent the spread of corona through pocket milk? Published on: 16 July 2020, 04:47 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.