நம் சமையலறையில் இருக்கும் பொருட்களில், உடல் ஆரோக்கியத்தை தன்னகத்தே உள்ளடக்கியப் பொருட்களில் வெந்தயம் மிக முக்கியமானது.
ஏனெனில் இதனைக் கொண்டு, பல நோய்களை விரட்ட முடியும். இதன் காரணமாக, நம் சமையலில் அன்றாடம் வெந்தயத்தைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்கள் நம் முன்னோர்கள்.
சத்துக்கள் (Nutrients)
சிறு வெந்தயமானது சுவைக்காக மட்டுமல்லாமல், பல மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியுள்ளன.மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, நீர் சத்து, புரதச் சத்து போன்றவை வெந்தயத்தில் அடங்கியுள்ளன. இது தவிர சுண்ணாம்புச்சத்து, சோடியம் சத்து, இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்ற தாது பொருட்களும், ரிபோபிளேவின், தயாமின், வைட்டமின் ஏ, போன்ற சத்துகளும் இடம்பெற்றுள்ளன.
பிரசவ வலி (Labour pains)
பிரசவ காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் வலியினை கட்டுப்படுத்த வெந்தயம் பேருதவியாக உள்ளது. பெண்களின் கருப்பையைச் சுருக்கி, குழந்தை பிறப்பதற்கு தூண்டுதலாகவும் இருக்கிறது.
ஆனால் பெண்கள் கர்ப்பகாலத்தில் வெந்தயத்தை அளவோடு சாப்பிடுவது நல்லது. அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் கருசிதைவு அல்லது குறை பிரசவம் உண்டாக வாய்ப்பு உள்ளது.
இதயப் பாதுகாப்பு (இதயப் பாதுகாப்பு)
வெந்தயத்தில் உள்ள பொட்டாசியம் சத்தினால் நம் இதயத்துடிப்பும், ரத்தக் கொதிப்பும் சீராக இருக்கும். வெந்தயத்தில் இருக்கும் நார்ச்சத்தானது இதய அடைப்பை வரவிடாமல் தடுக்கிறது.
கொலஸ்ட்ராலைக் குறைக்க (To lower cholesterol)
நம் உடலில் உள்ள கொழுப்புப் புரதத்தை இது குறைப்பதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நம் உடலின் எடையை குறைக்கலாம். சக்கரை நோய் கட்டுப்படுத்த வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து உள்ளதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். அமினோ அமில சத்து வெந்தயத்தில் இருப்பதால், இன்சுலின் சுரப்பியை நம் உடலில் சீராக வைக்கிறது.
சீதபேதி
20 கிராம் அளவிற்கு வெந்தயம் எடுத்து வறுத்துக் கொள்ள வேண்டும். அதில் இடித்த வெல்லத்தை 50 கிராம் சேர்த்து பிசைந்து ஒரு நாளைக்கு நான்கு முறை சாப்பிட்டு வந்தால் சீதபேதி நிற்கும்.
நெஞ்சு எரிச்சலைத் தடுக்கும் வெந்தயத்தில் இருக்கும் பசை தன்மையானது உங்கள் வயிற்றில் உள்புறத்தில் சூழ்ந்து கொள்வதால் எரிச்சலை உண்டாக்கும் குடல் தசைகளை சரி செய்கிறது. நம் உணவினை தாளிக்கும்போது ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்துக் கொள்வதால் நெஞ்செரிச்சலில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க...
Share your comments