
உணவு தானியகளில், அளவில் சிறிய விதைகளைக் கொண்டவை சிறுதானியங்கள் என்று அழைக்கிறோம். இவை நமது ஊரில் உள்ள அனைத்து இடங்களிலும் வளரக்கூடியது. பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை நாம் சிறுதானியங்கள் மூலம் பெறலாம்.
வருங்கால உணவாக சிறுதானியம் மாற வாய்ப்பு
குறைவான மழைப் பொழிவு, குன்றிய மண்வளம், தேவைக்கதிகமான உரப்பயன் பாடு அது ஏற்படுத்தும் சுழல் கேடுகள், வேளாண் இடுபொருள் விலை ஏற்றம் போன்ற தற்போதுள்ள கால மாற்றத்தின் காரணமாக சிறுதானியமே வருங்கால உணவு என கருத வழிவகுக்கிறது.
சிறுதானிய வகைகள்
குதிரைவாலி (Barnyard Millet), கேழ்வரகு (Finger millet), தினை (Foxtail Millet), வரகு (Broom-corn Millet), சாமை(Little Millet), கம்பு (Pearl Millet), பனிவரகு (Proso Millet), சோளம் (Sorghum) ஆகியன சிறுதானியங்களின் வகைகள் ஆகும்.

சிறுதானியங்களில் ஒன்றான சாமை தானியத்தின் மகத்துவங்களை பார்ப்போம்
தற்போதுள்ள காலக்கட்டத்தில் உடலுக்கு நலன் பயக்கும் உணவுகளில் சிறுதானியங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும், சாமை வகை சிறுதானியம் குறித்து நம்மில் பலருக்கு தெரியாது. அது குறித்த விவரங்களை இங்கே அறிந்து கொள்ளலாம் வாருங்கள்!!
சாமையின் மருத்துவ குணங்கள்
- புஞ்சைத் தாவரங்களில் (சிறுதானியங்கள்) சிறப்பிற்குரிய தானியமாக கருதப்படுவது சாமை. இதன் மருத்துவ குணங்கள் எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமைப்படுத்துகிறது.
- காய்ச்சலினால் ஏற்படும் நாவறட்சியை போக்கும் தன்மை கொண்ட இது, வயிறு தொடர்பான நோய்களையும் கட்டுப்படுத்துகிறது.
- ஆண்கள் இதனை உட்கொள்வது மூலம், இனப்பெருக்க அணு உற்பத்தி அதிகரிக்கிறது. ஆண்மைக் குறைவை நீக்குகிறது.
- சர்க்கரையை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது. உடல் உறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் உகந்தது.
- இளம் பெண்களின் முக்கிய உணவாக இந்த சாமை மிக அவசியம் என்று கூறப்படுகிறது. நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட இந்த தானியம், நோய்களுக்கெள்ளாம் மூலமாக கருதப்படும் மலச்சிக்கலிருந்து விடுபட முடியும்.
- தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
M.Nivetha
nnivi316@gmail.com
Share your comments