“ராசா மாதிரி காலையில சாப்பிடு, ஒரு இளவரசன் போல மத்தியானம் சாப்பிடு, சாப்பாட்டுக்கே வழியில்லாதவன் போல ராத்திரி சாப்பிடு!” என்று ஒரு பழமொழி உள்ளது. ஏனெனில் காலை உணவு மிகவும் முக்கியமானது. காலையில் சரியாக சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கலோரிகளை திறமையாக கரைக்கலாம். மேலும் காலை உணவை தவறாமல் உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய ஆற்றலைப் பெற முடியும். அதிலும் உண்ணும் காலை உணவில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகமாகவும், கொழுப்புக்கள் குறைவாகவும் இருக்க வேண்டும். இப்படி கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவை காலையில் எடுத்துக் கொள்ளும் போது, நாள் முழுவதும் உடலுக்கு வேண்டிய ஆற்றலானது அதிக அளவில் மெதுவாக உடலுக்கு கிடைக்கும்.

காலையில் உணவை உட்கொள்ளும் போது அத்துடன் பழங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் காலையில் உண்ணும் உணவில் வைட்டமின் சி, டி , கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளதை அதிகம் சேர்க்க வேண்டும். மூளைக்கு தொடர்ச்சியாக குளுக்கோஸ் தேவைப்படும். ஆனால் எப்போது ஒருவர் காலை உணவைத் தவிர்க்கிறாரோ அப்போது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக பராமரிக்காமல் போகும்.
மேலும் ஆய்வு ஒன்றிலும் காலை உணவை உண்பதால் கவனச்சிதறல் குறையும், பிரச்சனைகளை சரிசெய்யும் திறன் அதிகரிக்கும், மூளை சிறப்பாக செயல்படும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் தவறாமல் காலை உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
Share your comments