நம் உடல் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்க ரத்த ஓட்டம் மிக முக்கியமாக அமைகிறது . உடலில் ரத்தம் குறைவாக இருந்தாலும் ரத்த ஓட்டம் சீராக இல்லாவிட்டாலும் மனிதனுக்கு வரும் பிரச்சனைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இதனை சரி படுத்த ஈஸியான டிப் மிக்ஸ்ட் ஜூஸ். மிக எளிமையான முறையில் வீட்டிலேயே செய்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள.
அரை பீட்ருட், 1நெல்லிக்காய், 1ஆரஞ்சு, 1காரட், இதனை சேர்த்து அரைத்து தினமும் ஒரு டம்பளர் வீதம் குடித்து வந்தால் உடல் சுத்தமாவதோடு உடலில் ரத்தம் அதிகரிக்கும் ரத்த ஓட்டம் சீராகும் மேலும் கல்லீரல் பிரச்சனைகளும் அகலும். ரத்த சோகை இருப்பவர்கள் இதை தினமும் குடித்து வந்தால் இது சிறந்த மருந்தாக அமையும்..
பீட்ருட்: உடலில் ரத்தம் சுரக்கவும் ரத்த ஓட்டம் சீராக இருக்கவும் பீட்ருட் மிக சிறந்ததாக அமைகிறது.
நெல்லிக்காய்: உடலில் உள்ள கொழுப்பை கரைத்து ரத்த ஓட்டத்தை சீராக்கி ரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்திற்கு பலத்தை தருகிறது. சிறந்த மருத்துவ குணம் கொண்டது.
ஆரஞ்சு:உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ரத்தம் கொண்டு செல்லும் நரம்பில் இறுக்கம் ஏற்படுவதை தடுத்து நரம்புக்கு பலத்தையும் ரத்த ஓட்டம் சீராக இருக்கவும் உதவுகிறது.
கேரட்: கண் சார்ந்த பிரச்சனைகளுக்கு மிக சிறந்த ஒன்று. பார்வை கூர்மையாகும். மேலும் மூட்டு வலிகளுக்கு நல்ல மருந்தாகவும் உள்ளது, மற்றும் சருமம் பொலிவையும் அதிகரிக்கிறது.
ரத்த சோகை ,நரம்பு பலவீனம் ,கண் பார்வை குறைபாடு, சர்ம வறட்சி போன்ற பல பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக இதனை நாமே வீட்டில் எளிய முறையில் செய்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ளலாம்.
Share your comments