கர்ப்பக் காலத்தில், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் வகைகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பம் என்பது தாய்மையின் கட்டமைப்பு. பூமியில் பிறக்கும் ஒவ்வொரு பெண்ணும் தாய்மைப்பேற்றை அனுபவிக்கத் தயாராகவே இருப்பாள். அந்த சுகமான அனுபவத்தின்போது, தாய்யின் உடல் ஆரோக்கியத்திற்கு, கடல் உணவு நல்லதா? என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள். அது வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நேரடியாக வலு சேர்க்கிறது. கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பல இருக்கின்றன. அந்த பட்டியலில் புதிதாக கடல் உணவுகளையும் இணைத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ‘பார்சிலோனா இன்ஸ்டிடியூட் பார் குளோபல் ஹெல்த்’ நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழுவினர் கர்ப்ப காலத்தில் கடல் உணவு உட்கொள்வதற்கும், குழந்தைகளின் அறிவாற்றல் செயல்பாட்டிற்கும் இடையே வலுவான தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர். கர்ப்ப காலத்தின் ஆரம்ப கட்டத்தில் மிருதுவான, கொழுப்பு நிறைந்த மீன்களை உட்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்கள். அப்படி சாப்பிடுவது குழந்தைகளின் அறிவாற்றலையும், ஆழ்ந்து கவனிக்கும் திறனையும் மேம்படுத்த வழிவகுக்கும் என்றும் கூறுகிறார்கள்.
குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் நரம்பணுக்கள் உருவாக்கம் கர்ப்ப காலத்தில் தொடங்குகிறது. அவற்றின் செயல்பாட்டிற்கு ஒமேகா - 3, பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடல் உணவுகள் மூலம் இந்த வகையான ஊட்டச்சத்துக்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கிறது.
இந்த ஆய்வில் கடல் உணவுகளை சாப்பிடாத தாய்மார்களின் குழந்தைகள் பின்தங்கி இருக்கிறார்கள். அதேவேளையில் எல்லா வகையான கடல் உணவுகளையும் சாப்பிடக்கூடாது. மருத்துவர்களிடம் ஆலோசித்து ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.
மேலும் படிக்க...
ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு- கல்வித்தகுதி 8ம் வகுப்பு!
Share your comments