முற்றியத் தேங்காயைப் பூ விழுந்தத் தேங்காய் என்று கூறுவார்கள். இதனை நம் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நாம், பலவித நன்மைகளைப் பெற முடியும்.
நல்ல சகுணம் (Good luck)
தேங்காய் நன்கு முற்றியப் பிறகு தேங்காயின் கரு வளர்ச்சி தான் தேங்காய் பூ அல்லது பூ விழுந்தத் தேங்காய் என்று அழைக்கப்படுகிறது.
உடைக்கும் போது தேங்காயில் பூ இருந்தால் அதனை நல்ல சகுனமாக சிலர் கருதுவார்கள்.
ஆனால், பூ விழுந்த தேங்காயைப் பார்க்கும் சிலர், அதனை வாங்க முன்வரமாட்டார்கள். சமையலுக்கும் பயன்படுத்த முன்வரமாட்டார்கள். உண்மையில், அதை சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா?
ஊட்டச்சத்துக்கள் (Nutrients)
தேங்காயிலும், தேங்காய் தண்ணீரிலும், இளநீரிலும் எவ்வளவு ஊட்டச் சத்துக்கள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும்.அதை விட மிக அதிக அளவிலான ஊட்டச் சத்துக்கள், இந்த பூ விழுந்தத் தேங்காயில்தான் இருக்கிறது. இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல இதன் சதைப்பற்றும் மிகவும் ருசியானது.உண்மையில் தேங்காய் பூவின் பலனைப் பற்றி தெரிந்து கொண்டால் தேங்காய் பூவை தேடி தேடி போய் வாங்கி சாப்பிடுவீர்கள்.
மருத்துவ நன்மைகள் (Medicinal benefits)
தேங்காய் பூவில் மிக அதிக ஊட்டச் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இரு மடங்கு அதிகரிக்கும்.
தொற்று நோய் (Infectious disease)
-
பருவ காலத் தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கும்.
-
தைராய்டு பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தால் தேங்காய் பூவை சாப்பிடுவது நல்லது.
-
இது தைராய்டு சுரப்பை ஒழுங்கு படுத்துகிறது. தைராய்டு பாதிப்பை குணப்படுத்துகிறது.
மலச்சிக்கல் (Constipation)
உங்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இதிலுள்ள மினரல், விட்டமின் உங்கள் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்கலை குணமாக்குகிறது.
உடலுக்குத் தேவையான விட்டமின்கள் அதிக அளவு கிடைக்கும். தேங்காய் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
கொழுப்பை கரைக்க (To dissolve fat)
-
ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை தேங்காய் பூ விரட்டும். கொழுப்பைக் கரைக்க தேங்காய் பூ நிச்சயம் உதவி செய்யும்.
-
ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கும்.
-
மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்பவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டால், முழு எனர்ஜி கிடைப்பதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் அளவிற்கு மேஜிக் தேங்காய் பூவில் இருக்கிறது.
புற்றுநோய் (Cancer)
தேங்காய் பூ ரத்தத்தில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.
முதுமைக்கு குட்பை (Goodbye to old age)
தேங்காய் பூவில் முக்கியமான அம்சம் முதுமையைத் தடுக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. இதைச் சாப்பிட்டு வந்தால் சூரியனால் ஏற்படும் சரும பாதிப்புகள் நம்மை நெருங்காது. இப்படி பல நன்மைகள் இதனுள் அடங்கியுள்ளன. எனவே இதனை இனிமேல் கட்டாயம் சாப்பிடுவோம். நோய்களில் இருந்து முழுமையாக விடுபடுவோம்.
மேலும் படிக்க...
உயிருக்கே உலைவைக்கும் குங்குமப்பூ- கர்ப்பிணிகளே உஷார்!
வருமான வரி தாக்கல் செய்வதில் தொடரும் சிக்கல்: காலக்கெடு நீட்டிப்பு!
Share your comments