விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு முன்னதாக மண்ணின் வளத்தை அதிகரிப்பதற்காக சணப்பு சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் நல்ல மகசூலையும், கூடுதல் வருவாயையும் ஈட்ட முடியும் என வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
பிரதானத் தொழில் (The main industry)
திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தென்னை விவசாயமே இங்கு அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வரும்போதிலும், தக்காளி, வெண்டை கத்தரிக்காய், மிளகாய் உள்ளிட்ட காய்கறி பயிர்களும் கிணற்றுப் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படுகிறது.
சணப்பு சாகுபடி
இந்நிலையில் விவசாயிகள் மண்ணை வளப்படுத்துவதற்காக பயிர் சாகுபடிக்கு முன் சணப்பு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சணப்பின் பயன்கள் (The benefits of jute)
-
சணப்பு காற்றில் உள்ள தழைச்சத்தை தனது வேர் முடிச்சுகளில் உள்ள நுண்ணுயிர்கள் மூலம் சேமிக்கும் தன்மை கொண்டது.
-
விதைத்த 45 நாட்களில் சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு வேகமாக வளர்ந்து நிற்கும்.
-
ஏக்கருக்கு 4 முதல் 5 டன் தழை உரத்தையும் சுமார் 15 கிலோ தழைச்சத்து தரும் தன்மையும் கொண்டது சணப்பை.
-
சணப்பு பயிரின் ஆணி வேர்கள் மண்ணில் ஆழத்துக்கு ஊடுருவ உதவுகிறது.
அது மட்டுல்லாமல் நீர் மற்றும் காற்று எளிதில் மண்ணில் புகுவதற்றும் உறுதுணையாக இருக்கிறது.
மண் அரிப்பு (Soil erosion)
இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், தென்னை மரங்களை சுற்றி இரண்டு மீட்டர் தூரத்திற்கு சணப்பை சாகுபடி செய்து வருகிறோம்.இதன் காரணமாக தென்னந்தோப்புகளில் மண் பிடிமானம் அதிகமாகி மேல் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது.
சணப்பு மிகவும் வேகமாக வளரும் என்பதால் தென்னை மரங்களை சுற்றி வளரும் களை வளர்ச்சியை கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்க செய்கிறது.
சணப்பு மற்ற பயிருடன் உரத்திற்காக போட்டியிடாது வளரும் தன்மை கொண்டது.
அனைத்து வகை மண்ணிலும் நன்கு வளரக் கூடியது. இதனால் மண்ணை வளப்படுத்துவதற்காக சணப்பை சாகுபடி செய்கிறோம். மேலும் விவசாய நிலங்களிலும் சணப்பு சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!
கொரோனா தடுப்பூசி போடவில்லையா? - இனி ரேஷன் பொருட்கள், கியாஸ், பெட்ரோல் கிடையாது!
Share your comments