நாம் சமைக்கும்போது நிறைய விஷயங்களில் கவனம் செலுத்த மறந்துவிடுகிறோம், இதனால் கடின உழைப்பிற்கு பின் தயார் செய்யப்படும் உணவு சுவையாக இருப்பதில்லை. எனவே இதற்கு சில குறிப்புகளை உபயோகித்தால் போதும் சுவைக்கு எந்த வித பாதிப்பும் வராது, அதற்கு செய்ய வேண்டிய சில Kitchen Hacks உங்களுக்காக கிழே பட்டியலிடப்பட்டுள்ளன. வாருங்கள் பார்க்கலாம்.
சமையல் குறிப்புகள்:
புட்டுக்கு மாவை வறுப்பதைவிட அரிசியை வறுத்து மாவாக்கி புட்டு செய்யலாம். புட்டு உதிரி உதிரியாக வரும்.
மோர்க்குழம்பு செய்யும்போது நிலக்கடலையை அரைத்து கலந்தால் மோர்க்குழம்பு சுவையாக இருக்கும்
சமோசாவுக்கு மாறு பிசையும் போது மைதா மாவை சலித்து மெல்லிய துணியால் கட்டி இட்லித்தட்டின் மேல் வைத்து 5 நிமிடம் ஆவியில் வைக்கவும். பிறகு உப்பு, சீரகம், டால்டா போட்டு பிசைந்து செய்தால் மொறு மொறுப்பாக இருக்கும்.
பட்டாணியில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து வேகவைத்தால், பட்டாணியின் கலர் மாறாமல் அப்படியே இருக்கும்.
மேலும் படிக்க: சென்னை: கோயம்பேடு காய்கறி விலை என்ன
அரிசி பெட்டகத்தில் வண்டு, புளு, பூச்சி பிரச்சனைகளை சமாளிக்க குறிப்பு:
நன்கு காய்ந்த மிளகாய் வைத்தலை அரிசி பெட்டகத்தில் போட்டு வைத்தால் வண்டு, புளு, பூச்சி ஏதுவும் வராது. மிளகாய் வைத்தலில் இருக்கும் கார்பு தன்மை வண்டை எதிர்த்துப்போராட உதவும். அதே நேரம் கடையில் வாங்கிய மிளகாய் வத்தலை அப்படியே உபயோகிக்காமல், வெயிலில் நல்ல காயவிட்டு பின் அரிசி பெட்டகத்தில் போடவும்.
அடுத்ததாக புளு, பூச்சியை தடுக்க வேப்பிலையை பயன்படுத்தலாம். வேப்பிலைகளையும் நல்ல காய வைத்து அரிசிக்குள் போட வேண்டும். வேப்பிலையை காய வைத்திருப்பதால் அரிசியில் கசப்பு தன்மை ஏற்படும், அச்சம் இருப்பின் காட்டன் துணியில் சின்ன மூட்டைப்போல் கட்டி அரிசியில் போட்டு வைக்கலாம்.
மேலும் படிக்க:
Share your comments