விஞ்ஞானம் எத்தனை வளர்ந்திருந்தாலும் குழந்தைங்கள் முதல் பெரியவர்கள் வரை ஏதோ ஒரு நோயால் அவதி படுகின்றனர். இதன் காரணமாகவே எந்த ஒரு விஷயத்தையும் தகுந்த நேரத்திற்கு செய்வதே சால சிறந்தது.
அதிகம் காணப்படும் உடல் ரீதியான பிரச்சனைகளுள் எலும்பு பலவீனமும் ஒன்று. முந்தைய காலங்களில் எலும்பு பலவீனம் ஆண்களிடையே அதிகம் காணப்பட்டது. ஆனால் இப்பொழுது ஆண்களை விட பெண்களே இதற்கு அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பெண்கள் குழந்தை பெற்றவுடனேயே அவர்களின் எலும்பு பலவீனம் அடைந்து விடுகிறது. வயது அதிகரிக்க அதிகரிக்க நோயும் அதிகரிக்கிறது. வாழ்வின் மாற்றம், உணவு நடை முறை மாற்றம் இதன் காரணங்களால் பெண்களின் உடலில் மின்ரல்ஸ் குறைபாடு ஏற்படுகிறது. இதனாலேயே வயதாவதற்கு முன்பே பெண்களின் அழகும், இளமையும் பறிக்கப்படுகிறது.
எப்படி தவிர்ப்பது இந்த பிரச்சனையை
நம் எலும்பானது புரதம், கேல்சியம் மற்றும் போஸ்போரஸ்ஸால் ஆனது. இதை பாதுகாப்பது நம் கடமை.
* தினசரி நடை பயிற்சி மிக அவசியம். இதனால் எலும்புகள் சோர்வடைவது, பலவீனமாவதில் இருந்து காக்கப்படுகிறது.
* சரியான உடற்பயிற்சி எலுப்புகளை வலிமையாக்கும். ஆனால் உடலை சோர்வடைய செய்யும் பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். அதிக நேர பயிற்சி கூடாது.
* மாதவிலக்கில் பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
* தினமும் ஒரு முறையாவது பால் குடிக்க வேண்டும். பாலில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவூட்டும்.
* உங்கள் டயட்டில் புரத சத்து உள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.
* உளுந்து பருப்பினாள் செய்த களி, கஞ்சி எலும்புகளை பலவீனம் ஆவதில் இருந்து பாதுகாக்கிறது.
* உடல் எடையை சமமாக வைத்துக்கொள்ளுங்கள். அதிக எடை உங்கள் எலும்புகளுக்கு பாரமாக அமைந்து விடும்.
* அதிக எடை கொண்ட பொருட்களை சுமப்பதை தவிர்க்க வேண்டும்.
இந்த செயல்களை தொடர்ந்து செய்து வந்தாலே உங்கள் எலும்புகளை பலமாக வைத்துக்கொள்ளலாம்.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments