மூலிகை என்பது பெரும்பாலும் மருத்துவத்திற்கு மட்டுமே பயன்படும். இந்த இலக்கணத்தைத் தகர்த்து, ஆரோக்கியம், அழகு என இரண்டிற்கும் கைகொடுக்கிறது ஒரு மூலிகை. அது எதுவென்றால், கற்றாழை.
சித்தர்கள் பயன்படுத்தியது (Siddhars used)
அதனால்தான், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக நம் சித்தர்கள் பயன்படுத்திய மூலிகைகளில் முக்கியமானது கற்றாழை.
தவிர்க்கும் சிலர் (Some to avoid)
ஆரோக்கியத்துக்கும், அழகுக்கும் பயன்படும் மூலிகைச் செடி, கற்றாழை. கற்றாழையின் சாறும், அதன் சதைப்பகுதியும் தரும் பயன்களோ ஏராளம். கொழகொழவென இருப்பதால் சிலர் இதைப் பயன்படுத்தத் தயங்குவார்கள்.
ஏராளமான மருத்துவப் பலன்கள் (Numerous medical benefits)
கற்றாழையின் கசப்புச் சுவைக்காக இதனை ஒதுக்கி வைப்பவரும் உண்டு. ஆனால், இதன் மருத்துவப் பலன்கள் அமோகம். வெளி மருந்தாகவும், உள்மருந்தாகவும் அற்புதம் செய்யும் மூலிகையாகக் கற்றாழை பயன்படுகிறது.
மருத்துவப் பலன்கள் (Medicinal benefits)
கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட், ஆன்டிபயாடிக் நிறைந்துள்ளன. கால்சியம், சோடியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ், ஜின்க், ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, சி, இ உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியாகவும் கற்றாழை பயன்படுகிறது. செல் வளர்ச்சிக்கு உதவிபுரிகிறது.
தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் (Controlling infection)
காயம், தழும்பு, வலிகள் குணமாகின்றன. கற்றாழையில் உள்ள சதைப்பகுதியை உட்கொள்வதால், அல்சர், புற்றுநோய், தொற்று நோய்கள், கீமோதெரப்பியின் பக்கவிளைவுகள் கட்டுப்படும்.
கருப்பை நோய்கள் (Uterine diseases)
கற்றாழைச் சாற்றைத் தினமும் காலையில் ஒரு கிளாஸ் மோருடன் கலந்து உட்கொண்டுவந்தால், கர்ப்பப்பை நோய்கள் வராமல் தடுக்கலாம், கர்ப்பப்பை பிரச்னையும் குணமாகும். மூட்டு வலி, மூட்டு வீக்கம், மூட்டு இறுகுதல், மூட்டு பலவீனம் குணமாகும்.
அழகு சருமத்திற்கு (For beauty skin)
முகத்தில் கற்றாழையின் சாற்றைப் பூசிவர தழும்புகள், கரும்புள்ளிகள், பருக்கள் இன்றி சீரான, அழகான சருமம் கிடைக்கும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.
பாக்டீரியாவை உருவாக்கும்
செரிமானத்திற்கு (For digestion)
கற்றாழை வயிற்றில் நல்ல பாக்டீரியாவை உருவாக்கி, செரிமான செயல்பாட்டைச் சீராக்கும். இர்ரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் என்கிற உணவு உண்டதும் மலம் கழிக்கும் உணர்வு ஏற்படும் பிரச்னை தீரும்.
மலமிலக்கி (Laxative)
ஆசிட் ரிஃப்லெக்ஸ் என்று சொல்லக்கூடிய உணவுக்குழாயில் அமிலம் வெளியேறி, உணவுக்குழாயில் புண் ஏற்படும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளிவைக்க கற்றாழைச் சாறு உதவுகிறது. நெஞ்சு எரிச்சல் குறையும். வயிற்றுப் புண்கள் வராமல் தடுக்கும். சிறந்த மலமிலக்கியாகச் செயல்படும்.
கெட்ட கொழுப்பை அகற்றும் (Removing bad fat)
கற்றாழையில் உள்ள சதைப்பகுதியைச் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பினை உடலில் சேர உதவுகிறது.
சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் (Controlling sugar)
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும். இதில் உள்ள வைட்டமின் சி, சளி, இருமல், மூக்கு அடைப்பு, சுவாசக் கோளாறுகளை நீக்கும்.
இறந்த செல்களை நீக்கும் (Removing dead cells)
கற்றாழை சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்கவைத்து, இறந்த செல்களை நீக்கும். சருமச் சுருக்கங்கள், சருமத்தில் ஏற்படும் வரிகள், திட்டுக்கள் சரியாகும். பிரசவத்துக்குப் பின் ஏற்படும் ஸ்ட்ரெச் மார்க்கை நீக்கும்.
உடல் குளிர்ச்சிக்கு (For body cooling)
கற்றாழையை வாரம் ஒரு முறை கூந்தலில் தடவிவர, கூந்தல் மென்மையாகும். பளபளப்புடன் காணப்படும். உடல் குளிர்ச்சி அடையும். அதிகப்படியான நீரை வெளியேற்றி சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும்.
தகவல்
அக்ரி சு சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
மேலும் படிக்க...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வாசனை எண்ணெய்கள்!
பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டால் பல நன்மைகள்!
தயிருடன் இவற்றைச் சேர்க்கவே கூடாது- சேர்த்தால் விளைவுகள் விபரீதம்!
Share your comments