1. வாழ்வும் நலமும்

மைதா உருவாக்கும் பல விதமான நோய்கள் - மக்களே உஷார்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Many types of diseases caused by maida - people beware!

நம்மூர் மக்கள் விரும்பி உண்ணும் உணவு என்றால், அது புரோட்டா எனப்படும் மைதா உணவுதான். ஆனால், மைதா உணவுகள் உடல் நலத்திற்கு அதிகளவில் கேடு விளைவிப்பதாக சுகாதாரத்துறை எவ்வளவுதான் அறிவுறுத்தினாலும், மக்களின் நாட்டம் மைதா பக்கமே செல்கிறது.

உண்மையில் இந்த மைதாவினால் ஏற்படும், நோய்கள் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். இத்தகைய விழிப்புணர்வு மட்டுமே மைதா மீதுள்ள நாட்டத்தைக் குறைக்க வழி செய்யும்.

கொழுப்பு

பொதுவாக, கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்களை அதிகம் எடுத்துக்கொண்டால் அவை கொழுப்பாக மாறிவிடும்.அதே நேரத்தில் காம்ப்ளக்ஸ் கார்போ ஹைட்ரேட் உணவுப் பொருட்கள் கொழுப்பை குறைக்க வகைசெய்யும்.கார்போஹைட்ரேட், உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. சர்க்கரை, நார்ச்சத்து, ஸ்டார்ச் ஆகியவற்றை குளுக்கோஸாக பிரித்து உடலுக்கு ஆற்றலாக வழங்குகிறது.அதனால் அன்றாடம் சாப்பிடும் உணவில் 50 முதல் 60 சதவீதம் கார்போஹைட்ரேட் இடம் பெற்றிருக்க வேண்டும்.

வகைகள்

சிம்பிள்', 'காம்ப்ளக்ஸ்' என இரண்டு வகை கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் கொண்ட உணவுப் பொருட்கள் கொழுப்பை குறைக்க வகைசெய்யும்.

எத்தனை நோய்கள்?

மைதா போன்ற சிம்பிள் கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள் செரிமானமாவதற்கு அதிக நேரம் எடுக்கும். அவற்றை தொடர்ந்து சாப்பிடுவது நீரிழிவு, இதய, நோய், மலச்சிக்கல், கொழுப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை உருவாக்கலாம். உணவில் சீரான அளவில் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் இடம்பெற்றால், அது கொழுப்பை குறைக்க உதவும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பைக் குறைக்க சிம்பிள் கார்போஹைட்ரேட்டுகளுக்குப் பதிலாக காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆரோக்கிய உணவு

நல்ல கார்போஹைட்ரேட்கள் பொதுவாக பக்க கொழுப்பு எனப்படும் உள்ளுறுப்பு கொழுப்பை குறைக்க உதவும். இந்த கொழுப்புதான் உடலுக்கு மிகவும் ஆபத்தானது. பலவிதமான நோய்களையும் உருவாக்கக்கூடியது. ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்களை உணவில் 50 முதல் 60 சதவீதம் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு மேல் சேர்க்கக்கூடாது.

ஏனெனில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்களை அதிகம் எடுத்துக்கொண்டால் அவை கொழுப்பாக மாறிவிடும். உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பை விரைவாக கரைக்க மன அழுத்தம் இல்லாத மற்றும் ஆரோக்கியமான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். ஜிம்முக்கு சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வதால் மட்டுமே கொழுப்பையோ, உடல் எடையையோ குறைத்துவிட முடியாது. ஆரோக்கியமான உணவு பழக்கத்தையும் பின்பற்ற வேண்டும்.

அதே நேரத்தில் உடல் தசையை வலுப்படுத்த விரும்புபவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அவர்கள் கார்போஹைட்ரேட் உணவுகளையும் சாப்பிடலாம். உடற்பயிற்சிக்கு பிறகு ஹார்போஹைட்ரேட் நிறைந்த பழங்களை உட்கொள்ளலாம்.

ஆரோக்கியத்திற்கு ஏற்றவை

பார்லி, பாப்கார்ன், தயிர், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ஓட்ஸ், கோதுமை பிரெட், பீன்ஸ், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு, பூசணி, புரோக்கோலி, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் போன்ற காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஏற்றது.நொறுக்கு தீனிகள், குளிர்பானம், ஜஸ்கிரீம், சாக்லெட் போன்ற சிம்பிள் காம்ப்ளக்ஸ் உண்வுகளை தவிர்த்துவிடுவது நல்லது.

மேலும் படிக்க...

நல்லெண்ணெய் விலை கிடு கிடு ஏற்றம் - ஒரே வாரத்தில் ரூ.166 உயர்வு!

13 ஆயிரம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்!

English Summary: Many types of diseases caused by maida - people beware! Published on: 30 June 2022, 07:18 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.