1. வாழ்வும் நலமும்

மருத்துவ குணங்கள் நிறைந்த ஆப்பிள்

KJ Staff
KJ Staff

ஆப்பிள் பழங்காலத்தில் இருந்தே அறியப்பட்ட ஒரு அற்புதமான பழமாகும். ஆப்பிள், குமளி பழம், ஆப்பழம், சீமை இலந்தைபழம், அரத்திபழம் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் குளிர் பிரதேசங்களில் வளரக்கூடியது. தற்போது இந்தியா, சீனா, அர்ஜென்டினா மற்றும் மத்திய ஆசியாவில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. நம்நாட்டில் சிம்லா, காஷ்மீர் பகுதிகளில் உள்ளன. எல்லாப் பருவ காலங்களிலும் கிடைக்கும் ஆப்பிள், அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி சாப்பிடக்கூடியது. விலை சற்று அதிகம் என்றாலும் மருத்துவத்தில் இதன் பயன் அதிகரித்துள்ளது.

சத்துக்கள்: ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலிய சத்துகள் அதிக அளவில் அடங்கியுள்ளன.

பயன்கள்: ஆப்பிள் பழத்தில் உள்ள ரசாயன கலவைகள் ஒன்றுக்கொன்று வேதியியல் முறையில் இணக்கமாக செயல்படுகிறது. ஆர்கானிக் கலவை இரும்பு சத்தை எளிதில் உடல் கிரகிக்க உதவுகிறது. ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் ரத்தசோகை விரைவில் நிவர்த்தியாகிறது. ரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது.

* தேவையற்ற கொழுப்பு சத்தை குறைக்கிறது. சோடியம் குறைக்கப்பட்டு ரத்த அழுத்தம் குறைய உதவுகிறது. அதிக ரத்த போக்கை தடுக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது. செரிமாண மண்டலம் சீராக இயங்க செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்க செய்கிறது. இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. இன்சுலின் சுரப்பு நடைபெறுவதால் ரத்த சர்க்கரை குறைய உதவுகிறது. சோடியம் உடம்புக்கு பயன்படுவது போக அதிகப்படியாக சேராமல் பாதுகாக்கிறது.

* மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள், சிந்தனையாளர்கள், மாணவர்கள் ஆகியவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது.

* குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஆப்பிள் பழத்தை வேகவைத்து பிசைந்து கொடுத்தால் குணமாகும்.

* வலிப்பு உள்ளவர்கள் ஆப்பிள் பழச்சாறு 60 மி.லி, அத்திப்பழச்சாறு 60 மி.லி கலந்து தினசரி இரண்டு வேளை கொடுத்து வந்தால் மூன்று தினங்களில் வலிப்பின் தீவிரம் குறைந்துவிடும்.

* இதய நோயாளிகளுக்கு சிறந்த உணவாகிறது. நரம்பு தளர்ச்சி நீங்கவும், நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் பழம் மட்டும் சாப்பிடுவதால் மிகுந்த நன்மை கிடைக்கிறது.

* தூக்கத்தில் எழுந்து நடக்கும் இயல்புடையவர்கள் குணமடைய, இரவில் இரண்டு ஆப்பிள் பழங்களை தண்ணீரில் போட்டு வைத்திருந்து அதிகாலையில் இதன் சாற்றை பிழிந்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

வறட்டு இருமல் உள்ளவர்கள், தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இருமல் தீரும்.

* சரியான உடல் வளர்ச்சியும், சதைப்பிடிப்பும் இல்லாதவர்களும் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டால் ஒல்லியான உடல் சீராகப் பருமன் அடையும்.

* குடற் கிருமிகள் வெளியேற ஆப்பிள் பழத்தை நெருப்பில் சுட்டு சாப்பிட்டலாம்.

* ஆண்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

* உடம்பில் சிலருக்கு கெட்டவாடை வரும்; வியர்வை நாற்றம் அடிக்கும். இவர்களின் ரத்தம் சுத்தம் அடையவும், கெட்ட வாடை இல்லாமல் இருக்கவும், தினசரி இரண்டு ஆப்பிள் பழங்களை சாப்பிட்டு வந்தால் இக்குறைகள் நீங்கும். உடலில் நல்ல மணம் இயற்கையாக உண்டாகும்.

* ஆப்பிள் பழச்சாற்றை தேவைக்கு ஏற்ப தயாரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் பாகு பதம் வரும். இதை காலை, மாலை, இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் சமநிலைக்கு வந்து, வயதுக்கு ஏற்ற அளவில் செயல்படும். இதய நோயாளிகளும், மூளையின் போஷாக்கு தேவைப்படுபவர்களும் இம்முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

* குதிகால் வாதம் உள்ளவர்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிடலாம்.

* சிறிது காலம் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் கீல் வாதம், நரம்பு சம்மந்தப்பட்ட சகல வாதங்களும் படிப்படியாகக் குறைந்து பூரண குணம் கிடைக்கும்.

* ஆப்பிள் மரப்பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும். இதை நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். இப்பூக்களை வாங்கி சுத்தம் செய்து, இதற்கு சமமாக சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து செய்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வைத்து துணியால் வேடு கட்டி ஒரு மண்டலம் வெயிலில் வைத்து எடுத்துக்கொண்டு தினசரி 10 கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் கோளாறுகள் நீங்கும்.

ஆப்பிள் ஜூஸ்: ஆப்பிள் பழம் ஒன்றை துண்டாக வெட்டி கொள்ளவேண்டும். ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட் 500 கிராம் சேர்த்துக் கொள்ளவேண்டும். பனங்கற்கண்டும் தேவையான அளவில் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து மிக்சியில் அடித்து தினசரி சாப்பிட்டுவந்தால் இயற்கையான தாதுபலம் கிடைக்கும். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் இதய நோய் பாதிப்பு வராமல் செய்துவிடலாம். புற்றுநோய் வராமல் தடுக்கும். குடற்புற்று, ஆசனப்புற்றைத் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. உடம்பில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்பட்டு இளமையை நீட்டிக்கிறது.

 

English Summary: Medicinal properties of Apple Published on: 24 January 2019, 04:30 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.