நினைத்தாலே நாவில் கசப்புத் தன்மையை உணரச் செய்வதில், பாகற்காய் மிகவும் முக்கியமானது. அதனால்தான் சிறியவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலானோர் பார்த்ததும் முகம் சுளிக்கும் ஓரே காய் பாகற்காய்.
விரும்புவதில்லை (Do not like)
பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மையினாலேயே அதை யாரும் அதிகம் விரும்புவதில்லை. ஆனால் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது.
பாகற்காயில் உள்ள பீட்டா கரோட்டின் (Betta Carotene) மற்றும் வைட்டமின் A கண் சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தரும். வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் கண்களைப் பாதுகாக்க உதவுகிறது.
பலன்கள் (Benefits)
-
பாகற்காயினை தினமும் வேகவைத்து சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தி கூடும்.
-
ஒரு வாரம் தொடர்ந்து பாகற்காய் ஜீஸ் குடித்தால் ஈரல் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
-
பசுமையாக உள்ள பாகற்காய் ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற தொல்லைகள் தீரும்.
-
பாகற்காய் ஜீஸ் டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும். ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கும் பேணுவதற்கும் சிறுநீரகக்கற்களையும் நீக்கவும் உதவுகிறது.
-
தினமும் பாகற்காய் சாப்பிடுவதால் கெட்ட கொழுப்புகள் நீங்கி இதயம் பாதுகாக்கப்படுகிறது. பசியினையும் அதிகரிக்கும்.
-
கணைய புற்றுநோய் செல்கள் வருவதைத் தடுக்கிறது.
ஆன்டி-ஆக்ஸிடென்ட் (Anti-oxidant)
இதில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் (Anti-oxidant) அதிக அளவில் உள்ளதால் செரிமானத்திற்கு உதவுகிறது. இதனால் தேவையான சத்துக்கள் உறிஞ்சப்பட்டு உடல் எடை குறைகிறது.
தழும்புகள் மறையும் (The scars will disappear)
பாகற்காயையோ அதன் இலைகளை வேக வைத்து சாப்பிடுவதால் சருமத்தில் உள்ள தொற்றுகள், பருக்கள், தழும்புகள் வேகமாக மறையும்
விஷம் முறியும் (The poison will break)
இலை சாற்றினைக் குடித்து வாந்தி எடுத்தால் பாம்பு(கண்ணாடி விரியன்) விஷம் கூட நீங்கும்.
நோய்கள் நீங்கும் (Diseases will disappear)
பாகற்காய் ஜீஸூடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். தினமும் 2 வேளை குடித்து வந்தால் மூல நோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும்.
Share your comments