1. வாழ்வும் நலமும்

மருத்துவ குணங்கள் நிறைந்த முலாம்பழம்

KJ Staff
KJ Staff

உடல் உஷ்ணத்தை போக்க கூடியதும், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கவல்லதும், வயிற்றுப்போக்கை குணப்படுத்த கூடியதுமான முலாம்பழம் நல்ல மணம், சுவை உடையது. மிகுந்த சத்துக்களை உள்ளடக்கியது. இதில் வைட்டமின் ஏ, இரும்புச் சத்து, பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது. மினரல் அதிகம் இருக்கிறது.

நோய்களை தடுக்க கூடியது மட்டுமின்றி உடலுக்கு புத்துணர்வை அளிக்கவல்லது. கோடைக் காலத்தில் முலாம் பழம் அதிகளவில் கிடைக்கும்.

இதை கொண்டு நீர்வேட்கையை தணிக்கும் பானம் தயாரிக்கலாம். முலாம் பழத்தின் சதை பகுதியை அரைத்து பனங்கற்கண்டு சேர்த்து கலந்து குடிக்கலாம்.

இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். முலாம் பழத்தை பயன்படுத்தி மில்க் ஷேக் தயாரிக்கலாம். விதைகள் நீக்கிய முலாம் பழத்துடன், சிறிது பனங்கற்கண்டு, காய்ச்சிய பால் சேர்த்து அரைத்து சிறிதளவு குங்குமப்பூ சேர்க்கவும். இந்த மில்க் ஷேக்கை காலை உணவின்போது எடுக்கலாம்.

இது, வெயில் காலத்தில் ஏற்படும் சோர்வை போக்குகிறது. சிறுநீர் எரிச்சலை தடுக்கும். மிகுந்த சத்தூட்டமான உணவாகிறது.  கர்ப்பிணி பெண்கள் இதை எடுத்துக்கொண்டால் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். குழந்தையின் முதுகெலும்பு, மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.

மலிவாக கிடைக்க கூடிய முலாம் பழத்தை பயன்படுத்தி உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் பானம்

தயாரிக்கலாம்.

 விதைகள் நீக்கிய முலாம் பழத்துடன், கால் ஸ்பூன் சீரகப் பொடி, 2 சிட்டிகை சுக்குப் பொடி, சிறிது பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை சாப்பிட்டுவர வயிற்று வலி, வயிற்றுபோக்கு சரியாகும். வெயிலால் ஏற்படும் நோய்களை குணமாக்கும். சீத பேதி, கழிச்சலுக்கு மருந்தாகிறது.

சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் பானம் தயாரிக்கலாம். முலாம் பழத்தின் சதை மற்றும் விதையுடன் சீரகப்பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி குடிப்பதால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதுடன் உற்சாகத்தை கொடுக்கிறது. சிறுநீர் பெருக்கியாக விளங்கும் இது சிறுநீர் எரிச்சலை தடுக்கிறது.

முலாம் பழம் உள் உறுப்புகளின் உஷ்ணத்தை குறைக்கிறது. வெளிப்பூச்சாக பயன்படுத்துவதன் மூலம் தோல்நோய்கள் குணமாகும்.  முலாம் பழத்தின் விதை சிறுநீர் எரிச்சலை போக்குகிறது. வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும். முலாம் பழம் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானது. கோடைகாலத்துக்கு ஏற்ற உணவாக விளங்குகிறது.

  • இப்பழத்தில் புரதச்சத்து, கார்போஹைட்டிரேட், சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புசத்து, சோடியம், தாமிரம், கந்தகம், குளோரின், வைட்டமின்கள் "ஏ', "பி', "சி', ஆக்சாலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
  • கனிந்த பழத்தின் சதைப் பகுதியை அப்படியே சாப்பிடலாம். இத்துடன் தேன், சர்க்கரை கலந்தும் உண்ணலாம். ஜூஸ் ஆகவும், பாலுடன் கலந்து "மில்க் சேக்'காகவும் பருகலாம்.
  • முலாம் பழத்தை உண்டு வர மூல நோய் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். சிறுநீர்தாரை எரிச்சல், நீர்க்கடுப்பு நீங்கும்.
  • அஜீரணத்தை அகற்றி பசி ருசியை ஏற்படுத்தும்.
  • இதில் வைட்டமின்கள் "ஏ', "பி', "சி' தாதுப் பொருள்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். கல்லீரல் கோளாறுகளைப் போக்கும் தன்மை இதற்கு உண்டு.
  • பித்தத்தை மொத்தமாக அகற்றும். சரும நோய்க்கு எளிய இயற்கை மருந்து.
  • இப்பழச் சதையுடன் தேன் கலந்து உண்டு வர, வாய்ப்புண், தொண்டைப் புண் குணமாகும். கண் பார்வையை அதிகரிக்கும் சக்தி இதற்கு உண்டு.
  • உடலுக்கு வலுவைத் தரும். இதன் பழத்தின் சதையைப் பயன்படுத்தி சர்பத் செய்து குடித்து வர உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.
  • கோடை நோய்கள் வராமல் காக்கும்.

 

English Summary: Medicinal properties of Muskmelon Published on: 04 January 2019, 05:40 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.