நாம் சாப்பிடும் காளான்களில் கலோரிகள் குறைவாகவும் வைட்டமீன்கள் தாதுக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். காளானின் சுவையும் ஊட்டச்சத்தும் கிடைத்ததற்கு அறியது. காளான் வகைகளில் நச்சு வகை காளாண்களும் கடும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இந்த சத்து நிறைந்த காளான்களில் நாம் எதிர்பார்க்காத பக்கவிளைவுகளும் காணப்படுகின்றன.
சோர்வு
ஒரு சிலருக்கு காளான் சாப்பிடுவதால் அசௌகரியம் மற்றும் பலவீனம் இருப்பதாக தெரியும். பெரும்பாலான மக்கள் மேலே குறிப்பிட்டுள்ள விளைவுகளை சந்திக்கின்றனர். இது போன்ற விளைவுகளை சந்திப்பவர்கள் காளாண் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
வயிறு கோளாறுகள்
சாப்பிடுவதற்கு உகந்த சில காளான்களும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதில் சிலருக்கு வயிற்று பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. மேலும் சிலருக்கு வயிற்றுப்போக்குப் பிரச்சனைகளும் ஏற்படும். சிலர் தசைபிடிப்பு, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளும் இருக்கும்.
சரும அலர்ஜிகள்
காளான் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் காணப்படுகின்றன. ஆனால் சிலருக்கு தோல் வெடிப்பு மற்றும் தோல் எரிச்சலும் ஏற்படுகின்றன. சிலருக்கு சுவாச வாயில் அதாவது மூக்கில் ரத்தப் போக்கு, வறண்ட தொண்டை, உலர்ந்த மூக்கு போன்ற பிரச்சனைகள் அதிகம் சாப்பிடும் போது ஏற்படும்.
கர்ப்ப காலத்தில் தவிர்ப்பது நல்லது
கர்ப்ப காலத்தில் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காளாண்கள் உட்கொள்வதை தவிர்க்கலாம். இதில் அதிகம் பாதிக்கக்கூடிய பக்கவிளைவுகள் இல்லை என்றாலும் காளான் உட்கொள்வதை தவிர்த்து விளைவுகள் ஏற்படுவதற்கு முன்னரே பாதுகாத்துக்கொள்ளலாம்.
தலைவலி
தலைவலியை ஏற்படுத்தும் சில குறிப்பிடத்தக்க மருந்துகள் மற்றும் பொருட்கள் உள்ளன, ஆனால் இது ஒரு சில மணித்துளிகளில் குணமாகிவிடும். ஆனால் காளான் உட்கொண்ட பிறகு சிலருக்கு ஒரு நாளுக்கு மேலாக தலைவலி இருப்பதாக கூறுகின்றனர்.
மன நோய் மற்றும் பதட்டம்
சில நபர்களுக்கு காளான்களால் ஏற்படும் மிக மோசமான பக்க விளைவுகளில் ஒன்று மன நோய் மற்றொன்ரு பதட்டம். அபரிமிதமான பயம், பீதி போன்ற மனநல கோளாறுகள் காளான்களை சாப்பிட்ட பிறகு ஏற்படுவதாக ஆய்வில் கூறியுள்ளனர். காளான்கள் சில நபர்களிடமும் பதட்டத்தை ஏற்படுத்துகின்றன, இது லேசானது முதல் தீவிர நிலை வரை செல்லும் வாய்ப்பு இருக்கிறது.
மேலும் படிக்க:
வெறும் 15 நாட்களில் காளான் உரம் தயாரிக்கவும்: இதோ நவீன நுட்பங்கள்
ஆன்லைன் காளான் வளர்ப்பு பயிற்சி- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஏற்பாடு!
Share your comments