1. வாழ்வும் நலமும்

உடலில் உள்ள இரத்தம் மற்றும் இரத்த அணுக்களை அதிகரிக்க உதவும் சில உணவு வகைகள்

KJ Staff
KJ Staff

 உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால், அனீமியா என்னும் மறதி நோயால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அதில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக இரத்தத்தில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதெற்கென கடைகளில் நிறைய மருந்துகள் விற்பனையாகின்றன.

ஆனால் அவற்றை மட்டும் சாப்பிடுவதால் உடலில் இரத்தம் அதிகரிக்காது. ஒரு சில இயற்கையான வழிகளையும் தினமும் செய்ய வேண்டும். இதனால் உடலில் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, இரத்தம் சுத்தமாகவும், உடலும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை செறிவாக இருக்க வேண்டும். இல்லையெனில் உடலில் நோய்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே அனீமியா நோய் வராது தடுத்துக் கொள்ள இரத்த அணுக்களை அதிகப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்து, உண்ணும் உணவுகளே. இரத்த அணுக்களை அதிகரிக்க அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்

மாதுளை

மாதுளைச் சாறு இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை மேலேறச் செய்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ராலைக் குறைத்து, கட்டற்ற மூலக்கூறுகளோடு போராடி, ஆபத்து விளைவிக்கக்கூடிய இரத்த உறைவுகளில் இருந்து காத்து, அருஞ்சேவை புரிகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவுகளை இவை அதிகப்படுத்துகின்றன.

நன்னாரி வேர்

மூலிகைகளில் ஒன்றான நன்னாரி வேர், உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறந்தது. அதிலும் இந்த வேரில் அதிகமான ஆன்டி-செப்டிக் பொருள் இருக்கிறது. இது இரத்ததில் இருக்கும் கிருமிகளை அழித்து, சுத்தமாக வைக்கிறது.

கற்றாழை

கற்றாழையில் இரத்தத்தில் ஏற்படும் அழற்சியை தடுக்கும் பொருள் அதிக அளவு உள்ளது. ஆகவே இவற்றை சாப்பிட்டாலும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பீட்ரூட்

இதில் அதிகமான அளவு இரும்புச்சத்து இருப்பதோடு, உடலுக்கு தேவையான அளவு இரத்த அணுக்களை அதிகரிக்கும் புரோட்டீன் இருக்கிறது. மேலும் இதை உண்பதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் இது ஒரு சிறந்த இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுப் பொருள். ஆகவே இதனை டயர்ட் இருப்பவர்கள் தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறைவதோடு, உடலில் இருக்கும் இரத்த அணுக்களும் அதிகரிக்கும். அதிலும் பீட்ரூட்டின் இலைகளில் வைட்டமின் ஏ-வும், அதன் வேர்களில் வைட்டமின் சி-யும் இருக்கின்றன.

கீரைகள்

காய்கறிகளான பசலைக் கீரை, ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், டர்னிப், காலிஃபிளவர், கீரை மற்றும் இனிப்பு உருளைக்கிழங்குகள் ஆகிய அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமானவை. மேலும் இவை அனைத்தும் உடல் எடையை கட்டுபடுத்துவதுடன், உடலில் இரத்த அணுக்களையும் அதிகரிக்கும். அதிலும் கீரைகள் செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்யும்.

இரும்புச்சத்து

இது உடலுக்கு மிகவும் தேவையான கனிமச்சத்து. இந்த சத்து எலும்புகளை மட்டும் வலுவாக்குவதில்லை, உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை விநியோகிக்கிறது. இந்த சத்து குறைவாக இருந்தால் அனீமியா நோயானது வரும். ஆகவே அந்த இரும்புச்சத்துக்கள் இறைச்சி, வெந்தயம், அஸ்பாரகஸ், பேரிச்சம் பழம், உருளைக்கிழங்கு, உலர்ந்த அத்திப்பழம், உலர் திராட்சை போன்றவற்றில் இருக்கும்.

பாதாம்

இரும்புச்சத்து மற்ற உணவுப் பொருட்களை விட பாதாம் பருப்பில் அதிகம் இருக்கிறது. ஒரு நாளைக்கு 1 அவுண்ஸ் பாதாம் பருப்பை சாப்பிட்டால், உடலுக்கு 6% இரும்புச்சத்தானது கிடைக்கும்.

பழங்கள்

அனீமியாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடச் சொல்வார்கள். இவற்றை உண்பதால் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடலில் உள்ள இரத்த அணுக்களின் அளவும் அதிகரிக்கும். மேலும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த பழங்களில் தர்பூசணி, ஆப்பிள், திராட்சை, அத்திப்பழம் போன்றவற்றை அதிகம் உண்ண வேண்டும்.

கிவி பழம்

இரத்தத்தில் குருதிச் சிறுதட்டுகள் குறைவாக காணப்படுவோர் கிவி பழங்களை சாப்பிட்டால் அதன் உற்பத்தி அதிகரிக்கும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக மட்டுமில்லாமல், உடலில் உள்ள இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும். மேலும் சுத்தமான ஆக்ஸிஜன் உடற்பயிற்சி செய்யும் போது இரத்ததில் கலக்கிறது. ஆகவே இரத்தமும் சுத்தமாக, சீராக உடலில் இயங்குகிறது. அந்த உடற்பயிற்சியில் வாக்கிங், ஜாக்கிங், ரன்னிங், குதித்தல் போன்றவற்றை செய்யலாம்.

மேற்கூறிய உணவுப் பொருட்களை உண்பதால் உடலில் இரத்த அணுக்களின் அளவு அதிகரிப்பதோடு, உடல் எடை அதிகரிக்காமல், உடலை எந்த ஒரு நோயும் தாக்காமல் ஆரோக்கியமாக வாழலாம். இவை யாவற்றையும் உங்கள் குடும்ப டாக்டரின் அலோசனையுடன் மேற்கொள்வதன் மூலம் தேவையற்ற தாக்கங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

 

English Summary: Natural food items helps to increase the Blood cells Published on: 05 January 2019, 01:34 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.