1. வாழ்வும் நலமும்

முந்திரி, பாதாம், பிஸ்தா- உடல் எடைக்குறைப்பு ஏஜென்ட்கள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Nuts that act as weight loss agents!

Credit : IndiaMART

கட்டுக்கோப்பான உடல் அமைப்பைப் பெற உடல்பயிற்சி அவசியம்.அப்படி உடற்பயிற்சி செய்யாததாலும், அதிக அளவில் துரித உணவுகள் உண்பதாலும் வயிறு, கைகள், கால்கள் போன்ற பகுதிகளில் கொழுப்பு சேர்ந்து உடல் எடை அதிகரிக்கிறது.

நோய்களுக்கு அஸ்திவாரம்(The foundation for diseases)

பல பெண்களுக்கு இது முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது. அதிக உடல் எடை பல்வேறு நோய்களுக்கும் வழிவகுக்கிறது. உணவு, தூக்கம் போன்றவற்றில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துதல், உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றால் படிப்படியாக எடையைக் குறைப்பதே ஆரோக்கியத்துக்கு நல்லது.

அந்தவகையில் நாம் பயன்படுத்தும் பருப்பு வகைகள் கூட நம் உடல் எடையைக் குறைக்கும் ஏஜென்ட்களாகச் செயல்படுகின்றன. இந்தப் பருப்புகளில் உள்ள நல்லக் கொழுப்பு, உடலில் உள்ளக் கெட்டக் கொழுப்பைக் கரைத்துவிடகின்றன. இதனால் உடல் எடைக் குறைவதுடன், மாரடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து நம்மைக் காக்கின்றன. சமீபத்திய ஆய்வுகளில், தினமும் பருப்பு வகைகள் உண்பவர்களின் உடல் எடையில் பெரிதாக மாற்றம் ஏற்படுவது இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் உள்ள புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புக்கள் போன்றவை எடை குறைப்பிற்கு அவசியமானவை. மேலும் பருப்பு வகைகள் இதயம் சார்ந்த நோய்கள் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு அல்லல்படுபவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன.அதிக பசி உண்டாகாமல் தடுப்பதில் இவை முக்கிய பங்காற்றுகின்றன.

பாதாம் பருப்பு (Almond)

பாதாம் பருப்பில் புரதச்சத்து, ஆன்டி ஆக்சிடென்டுகள் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவை கெட்டக் கொழுப்பு அதிகரிக்காமல் தடுக்கின்றன. இதன் மூலம் எடை சீரான அளவில் இருக்கும்.

பாதாமில் உள்ள அமினோ அமிலங்கள் இதயத்திற்கு நன்மைப் பயக்கின்றன. தினமும் நான்கு அல்லது ஐந்து பாதாம் பருப்பு சாப்பிடுவது போதுமானது.

அக்ரூட் (Walnut)

அக்ரூட் எனப்படும் வால்நட், உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை வெளியேற்றுகிறது. இதில் ஒமேகா என்னும் சத்து அதிக அளவில் உள்ளது.

பிஸ்தா (Pistachio)

பிஸ்தாவில் குறைந்த அளவிலான புரதச்சத்து இருந்தாலும் அது தசை நார்களின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கும் தன்மை கொண்டது.

முந்திரிப்பருப்பு (Cashews)

முந்திரியில் மக்னீசியம் மற்றும் புரதம் உள்ளன. இவை வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. முந்திரியில் கலோரி அதிக அளவில் இருப்பதால் மிகக் குறைந்த அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த்ப் பருப்பு வகைகள் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை நீக்குவது மட்டுமல்லாமல் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் அளிக்கின்றன.

மேலும் படிக்க...

தினமும் கீரை சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் - மக்களே உஷார்!

பட்டாசு வடிவில் சாக்லேட்டுகள்- தீபாவளியையொட்டி விற்பனை!

English Summary: Nuts that act as weight loss agents!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.