உலக நாடுகளையே அச்சத்தில் உறைய வைத்துள்ள ஒமிக்ரான், அதிகளவில் உயிர்பலி வாங்காது எனக் கூறப்பட்டாலும், மின்னல் வேகத்தில் தனது படைக்கு ஆட்களைச் சேர்த்து வருகிறது. ஒமிக்ரானால் வேகமெடுத்துப் பரவிவரும் கொரோனா தினசரி பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
நீரழிவு நோயாளிகள் (Patients with diabetes)
இது ஒருபுறம் இருந்தாலும், கொரோனாவில் உருமாறிய வைரஸான, ஒமிக்ரான் வைரஸிடம் இருந்து நீரிழிவு நோயாளிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல், தவறாமல் உடற்பயிற்சி செய்தல், போன்றவற்றுடன் ஆக்ஸினேற்றம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும் முயற்சி செய்ய வேண்டும்.
நோய் எதிர்ப்புச் சக்தி (Immunity)
இயற்கையாகவே உங்களுடைய நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்வது உங்களுக்கு டி-செல் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்யும். ஆனால் நீரிழிவு நோயாளிகள் மற்றும் இரத்த அழுத்தம் உடையவர்கள் என்றால் சில கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
ஏனெனில் நீரிழிவு நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது குறைவாகவே இருக்கும்.
எப்படிப் பாதுகாக்க வேண்டும்? (How to protect?)
-
நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய இரத்த சர்க்கரை அளவை எப்பொழுதும் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.
-
அவர்களின் உடம்பிற்கு ஏற்ற வகையில் இன்சுலின் மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
அனைவரும் தடுப்பூசி போட வேண்டும். அதே மாதிரி நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய எடையை சரியாக பராமரித்து வர வேண்டும்.
-
தவறாமல் உடற்பயிற்சி செய்து உடம்பைப் பேணிக் காக்க வேண்டும்.
-
உடல் பருமனாக இருப்பவர்களுக்கு கோவிட் 19 தொற்று கடுமையான பாதிப்பை உண்டாக்குகிறது.
-
எனவே தான் நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய எடையை கட்டுக்குள் வைக்கவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
ஊட்டச்சத்து உணவுகள் (Nutritional foods)
வைரஸ் தொற்றைத் தடுக்க, உணவுகளில் கொட்டைகள், பழங்கள் மற்றும் சாலட்டுகள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படாமல் தடுக்கும். நோய்களைத் தடுக்க பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 30 கிராம் நட்ஸ் வகைகள் பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும் படிக்க...
அடுத்து வருகிறது மிக மிக ஆபத்தான வைரஸ்- விஞ்ஞானி எச்சரிக்கை!
நடுங்கும் குளிரில் இருந்து தப்பிக்க- இந்த 4 பொருட்கள் மட்டும் போதும்!
Share your comments