தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த காலாண்டு விடுமுறை மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.அதாவது அக்டோபர் 12ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்றே சொல்லலாம்.
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 6- 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
காலாண்டு விடுமுறை
தேர்வுகள் முடிந்ததும் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அக்டோபர் 6 முதல் 8-ம் தேதி வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி நடத்தவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
12ம் தேதி வரை
ஆனால், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.
விடுமுறை நீட்டிப்பு
இதற்கிடையே, தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஏன் விடுமுறை நீட்டிப்பு
தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கான 2-ம் கட்ட எண்ணும், எழுத்தும் பயிற்சி அக்டோபர் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடப்பதால் இந்த விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
அதிவேகமாக பரவும் ஃபுளூ வைரஸ் - தற்காத்து கொள்வது எப்படி?
ஓய்வூதிதாரர்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு- 10 நாட்கள் மட்டுமே அவகாசம்!!
Share your comments