1. வாழ்வும் நலமும்

பச்சை முட்டை ஆரோக்கியத்திற்கு நல்லதா?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Raw Eggs Are Not Good For Health!

உடல் ஆரோக்கியம் என வரும்போது, எப்போதுமே அதில் முட்டைக்கு இடம் உண்டு. ஏனெனில், ஆரோக்கியத்திற்காக முட்டையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள்கூட அறிவுரை வழங்குகிறார்கள். அந்த அளவுக்கு முட்டையின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

முட்டை என எண்ணும்போது, பலரது விருப்பம், ஆஃப் பாயில் எனப்படும் ஆம்ப்ளேட்டைத்தான். ஒருசிலர், காலையில் பச்சை முட்டையை அப்படியேக் குடிப்பதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். இது நல்லதா?
உண்மையில் பச்சை முட்டையில் இருக்கும் திரவம் உடலுக்கு பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

நீர்

வேகவைக்காத முட்டையில் 10 சதவீதம் புரதமும், 90 சதவீதம் நீரும் உள்ளது. வேகவைக்காத முட்டையில் 10 சதவீதம் புரதமும், 90 சதவீதம் நீரும் உள்ளது. அதனுடன் பொட்டாசியம், மெக்னீசியம், நியாசின், சோடியம் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன.

மஞ்சள் கரு

முட்டையின் உள்பகுதியான மஞ்சள் கருவில் இரும்பு, துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற வைட்டமின்கள் உள்ளன. முட்டையில் இருக்கும் வைட்டமின்கள் இதயம், ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கு பயனுள்ளதாக இருக்கும். முட்டையை வேக வைத்து சாப்பிட்டால்தான் பலன் கிடைக்கும்.

ஒவ்வாமை

பச்சை முட்டையில் இருக்கும் திரவம் உடலுக்கு பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. முட்டையை அப்படியே உடைத்து சாப்பிட்டால் அதிலிருக்கும் வெள்ளைக்கரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும்.

அறிகுறிகள்

சருமம் சிவத்தல், அரிப்பு, வீக்கம், வயிற்று போக்கு, கண்களில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். வெள்ளை நிற திரவத்தை சாப்பிடுவது சிலருக்கு பயோட்டின் குறைபாட்டை ஏற்படுத்தும். பயோட்டின் குறைபாடு வைட்டமின் பி 7, வைட்டமின் எச் என்றும் அழைக்கப்படுகிறது.

தோல் பிரச்னைகள்

முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள அல்புமினை உட்கொள்ளும்போது உடல் பயோட்டினை உறிஞ்சுவதற்கு காரணமாகிறது. இதன் காரணமாக தோல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

பாக்டீரியா பாதிப்பு

முட்டையின் வெள்ளைக்கருவில் புரதம் அதிகமாக இருக்கும். இது சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். கோழிகளின் குடல் பகுதியில் சால்மோனெல்லா எனப்படும் பாக்டீரியா காணப்படும். அது முட்டை ஓட்டின் உள்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் பரவி இருக்கும். சால்மோனெல்லாவை நீக்க அதிக வெப்பநிலையில் முட்டையை வேக வைக்கவேண்டும். அதை விடுத்து முட்டையை அப்படியே குடித்தால் பாக்டீரியாக்களால் பாதிப்பு நேரும்.

மேலும் படிக்க...

செரிமானத்தை மேம்படுத்த இந்த உணவுகள் போதும்!

ஹோட்டல் நிகழ்ச்சியில் இளம் பெண்களுக்கு பானம் இலவசம் - வித்தியாசமான விளம்பரம்!

English Summary: Raw Eggs Are Not Good For Health! Published on: 18 September 2022, 09:46 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.