ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன்படி ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதியை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது. முன்னதாக ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க மார்ச் 31 கடைசி தேதியாக இருந்தது.
மத்திய அரசு வழங்கி உள்ள ரேஷன் அட்டை மூலம் சாமானிய மக்கள் குறைந்த விலையில் ரேஷன் பொருட்களை பெற்று பயன் அடைந்து வருகின்றனர். மாநிலம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இதன் காரணமாக, அரசு அளிக்கும் பல சலுகைகளும் ரேஷன் கார்டு வாயிலாக பயனாளிகளைச் சென்றடைகிறது. மேலும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது, இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுகின்றனர்.
நிபந்தனை
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமானால், ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டியது கட்டாயம். அதாவது,
ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் நாட்டின் எந்த மாநிலத்திலும் ரேஷன் கார்டை காட்டி ரேஷன் எடுக்கலாம்.
இந்நிலையில் ரேஷன் கார்டு, ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதியை மத்திய அரசு மீண்டும் ஜூன் 30, 2022 வரை நீட்டித்துள்ளது.
அதேநேரத்தில்,ரேஷன் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்காவிட்டால், அரசு வழங்கும் பல வசதிகளை ரேஷன் அட்டைதாரர்கள் இழப்பார்கள் என்று உணவு மற்றும் பொது விநியோகத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பது எப்படி?
-
இந்த ஆதார் இணைப்பை ஆன்லைனில் எளிமையான முறையில் பண்ணலாம்.
இதற்கு முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
-
பின்னர் ‘ஸ்டார்ட் நவ்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
-
அதன் பிறகு உங்கள் முகவரி, மாவட்டம், மாநிலம் ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.
-
இதற்குப் பிறகு ‘ரேஷன் கார்டு பெனிபிட்’ என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
-
இப்போது இங்கே உங்கள் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்ப வேண்டும்.
-
பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
-
இங்கே OTP ஐ நிரப்பிய பிறகு, உங்கள் திரையில் செயல்முறை முடிந்த செய்தியைப் பெறுவீர்கள்.
-
இந்த செயல்முறை அனைத்தும் முடிந்தவுடன், உங்கள் ஆதார் சரிபார்க்கப்பட்டு, உங்கள் ரேஷன் கார்டுடன் உங்கள் ஆதார் இணைக்கப்படும்.
ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை(OFFLINE)இணைக்க ரேஷன் கார்டு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் ரேஷன் கார்டுதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
இது தவிர, உங்கள் ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் தரவு சரிபார்ப்பும் ரேஷன் கார்டு மையத்தில் செய்யப்படலாம்.
மேலும் படிக்க...
Share your comments