விமானப்பணிப்பெண்களின், உடல் எடை அதிகரித்தால், சம்பளம் பிடித்தம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படுவது, அரபு நாட்டில் வழக்கத்தில் இருப்பதாக முன்னாள் விமானப்பணிப்பெண் கூறியிருக்கிறார். இந்தச் செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
ஒரு முறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்பது நம்மில் பலரது சிறுவயது ஆசையாக இருக்கும். ஆந்த ஆசை பெரும்பாலும் நிறைவேறுவது சாத்தியமே.அவ்வாறு விமானத்தில் நீங்கள் பயணித்திருந்தால், விமானப் பணிப்பெண்களின் சேவையை கண்டுணர்ந்த அனுபவம் இருக்கும்.
அன்பான உபசரிப்பு
விமானத்தில் ஏறியது முதல் விமானம் தரையிறங்கும் வரை, விமானப்பயணிகளை உபசரிப்பதுதான் இவர்களது வேலை. மிக நேர்த்தியாக உடை அணிந்து,கூடுதல் அழகாக மேக்கப் போட்டுக்கொண்டு கட்டுப்பாடான உடல் அமைப்புடன் இருப்பார்கள்.
அழகான வெளிப்புறத்தோற்றத்துடன் இருக்கும் இவர்களைப் பார்க்கும் போது, நாமும் அவர்களைப் போல உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் எனத் தோன்றும். உடல் எடையைக் குறைத்து சிலிம்மாக, சிக்கென்றத் தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் உருவாகும்.
சம்பளம் கட்
ஆனால், உடல் எடை கூடினால் இவர்களுக்குத் தண்டனைகள் வழங்கப்படும் என தங்களது தொழில் ரகசியத்தைப் போட்டு உடைத்துள்ளார் முன்னாள் விமானப்பணிப்பெண் ஒருவர். அரபு எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் மாயா டூகரிக் என்பவர் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்தார்.
அதில் அவர் விமானப்பணிப் பெண்களுக்கு உடல் எடை குறித்த மிக கடுமையானக் கட்டுப்பாடுகள் இருக்கும். உடல் எடை குறிப்பிட்ட அளவை விட அதிகமாக இருந்தால் அவர்கள் சம்பளம் குறைக்கப்படும் அளவிற்கு மோசமான தண்டனைகள் வழங்கப்படும் என்று மனம் திறந்து பேட்டியளித்தார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் படிக்க...
Share your comments