பிப்ரவரி 1ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. பொதுத்தேர்வைக் கருத்தில்கொண்டு, 10, 11மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளுக்காக இந்த பரிந்துரை முன் வைக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 10,11,12ம் வகுப்புகளுக்கானப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படவில்லை.பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.
விடுமுறை தொடரும்
இதனிடையே ஒமிக்ரான் பரவல் காரணமாக, தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்தது. இதையடுத்து, பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வரும், 31ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
திறக்கலாம் (Open)
இருப்பினும், 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்குத் திட்டமிட்டபடி இந்த ஆண்டு பொதுத்தேர்வை நடத்தியேத் தீருவது என பள்ளிக்கல்வித்துறை உறுதியாக உள்ளது. இதற்காக, பொதுத் தேர்வு எழுத உள்ள 10,11ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், பிப்ரவரி முதல் பள்ளிகளை திறக்கலாம் என்று அரசுக்குப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான பள்ளிக் கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தப் பரிந்துரையின்படி அடுத்தவாரம் பள்ளிகள் திறக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.
தேர்வு
அவ்வாறு பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில் ஒரு திருப்புதல் தேர்வு நடக்கும் என்றும், பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் அவர் கூறினார்.
மேலும் படிக்க...
மஞ்சள் மற்றும் தயிரின் பேஸ் பேக் டிப்ஸ்! அதன் நன்மைகள் என்ன?
PM Kisan திட்டம்: ஆண்டுக்கு 6000த்திற்கு பதில் 8000 வழங்க வாய்ப்பு!
Share your comments