தமிழகத்தில் எத்திலின் என்ற ரசாயனம் கலந்த திரவத்தை பயன்படுத்தி பழுக்க வைத்த 8000 கிலோ பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இந்தப் பழங்களை வாங்கி சாப்பிடுவதால், பல நோய்களுக்கு வாடிக்கையாளர்கள் ஆளாகக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி மற்றுர் பழச்சந்தை ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தை என்றப் பெருமையைப் பெற்றது. இந்தச் சந்தைக்கு ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நீயூசிலாந்து, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆப்பிள், ஆரஞ்ச், திராட்சை , கிவி உள்ளிட்ட பழங்கள் விற்பனைக்கு வருகின்றன.
தமிழகத்தில் தற்போது மாம்பழ சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. இதையடுத்து கோயம்பேடுக்கு மாம்பழங்களும் அதிகளவில் விற்பனைக்கு வருகின்றன. மாங்காய் இயற்கையாகப் பழுக்க இரு வாரங்கள் ஆகும் என்பதால், லாப நோக்கிற்காக 'கால்சியம் கார்பைடு' என்ற வேதிக்கல் மற்றும் எத்திலின் என்ற ரசாயனம் கலந்த திரவத்தை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைக்கின்றனர். இந்த ரசாயனத்தில் இருந்து எந்த வாசனையும் வராததால், இதை கண்டுபிடிக்க முடிவதில்லை. இந்த பழங்களை உண்போருக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பழங்கள் பறிமுதல்
இதுதொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில், கோயம்போடு பழ சந்தையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அதில், 75 கடைகளில் எத்திலின் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 7,000 கிலோ மாம்பழம், 1,000 கிலோ பட்டர் பழம் என, மொத்தம் 8 டன் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
எனவே கோடை சீசனில் மாம்பழம் சாப்பிட விரும்புபவர்கள், அது இயற்கையில் பழுத்ததா? என்பதைத் தெரிந்துகொண்டு சாப்பிடுவதே நல்லது.
மேலும் படிக்க...
பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் கால்சியம் குறைபாடு!
பிச்சை எடுத்து அன்னதானத்திற்கு ரூ1 லட்சம் நிதி- பிரமிப்பூட்டிய பாட்டி!
Share your comments