தோல் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு, டால்கம் பவுடர்கள் காரணம் என ஆய்வுகள் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளன.
கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே நம்மை வாட்டி வதைக்கு வியர்வையும் தொடங்கிவிடுகிறது. அதிலும் இந்த வியர்வையால், அனல்காற்று வீசும் பகுதிகளில், மக்கள் படும் துயரங்கள் சொல்லி மாளாது.
அதேநேரத்தில், கோடை காலத்தையொட்டி பெரும்பாலானோர்களின் வீடுகளில் டால்கம் பவுடர்களை பார்க்க முடிகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைவரும் பயன்படுத்துகின்றனர். வியர்வையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த பவுடர்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட சில டால்கம் பவுடர்களைப் பயன்படுத்தில், உடலுக்குக் குளிர்ச்சியாக, இதமாக இருக்கும் என விளம்பரங்களும் வெயிடப்படுகின்றனர். உண்மை இதற்கு நேர்மாறானது.
டால்கம் என்பது தொழில்நுட்ப ரீதியாக மண்ணில் இருக்கும் ஒரு கனிமம். சுரங்கத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. பவுடராக மட்டுமல்லாமல் லிப்ஸடிக், மஸ்காரா, பிளஷ் மற்றும் ஐ ஷேடோ உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்களிலும் கலக்கப்படுகிறது. இவைத்தவிர, உணவுப் பதப்படுத்துதல், மருந்துகள், சூயிங்கம், பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, பொம்மைகள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த டால்கம் பவுடர் உங்களுக்கும், உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை நம் முடிகிறதா? நம் முகத்தில் முகப்பரு வருவதற்கு டால்கம் பவுடர் தான் காரணம்.
ஆனால் நன்மைகளை விட தீமைகளே அதிகம். டால்கம் பவுடர் சருமத்தின் துளைகளை மூடுகிறது. ஆனால் மருத்துவ ரீதியாக இந்த ஓட்டைகள் திறந்தே இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.டால்க் என்பது மெக்னீசியம், சிலிக்கேட் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு வகை இரசாயனமாகும். இவை வியர்வையில் இருக்கும் சோடியத்தை உறிஞ்சுவதால் அதிகம் வியர்காது. வெப்பம் அதிகமாக இருக்கும்போது அதிகம் வியர்க்கும். வெப்பம் குறைவாக இருக்கும்போது வியர்வை குறைவாக இருக்கும்.
ஆனால் டால்கம் பவுடர்களைப் பயன்படுத்துவதால், உடலின் துளைகளை மூடி வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றன. இது நல்லதல்ல. அதனால் தான் மருத்துவர்கள் டால்கம் பவுடர்களை பரிந்துரைப்பதில்லை. குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு சோப்பு, பவுடர்கள் தேவையில்லை. வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டினால் மட்டும் போதும்.
வேண்டாம் டால்கம் (Do not talcum)
அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ், குழந்தைகளுக்கு டால்கம் பவுடர் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. டால்கம் பவுடர் குழந்தைகளுக்கு சுவாச நோய்களை ஏற்படுத்தும் என்று அந்த அகாடமி எச்சரித்துள்ளது. டால்கம் பவுடர் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயுக்கும் காரணம். பிறப்புறுப்பு பகுதியில் டால்கம் பவுடரைப் பயன்படுத்தும் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
மேலும் படிக்க...
Share your comments