ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் என்று சொல்லப்படும் உணவுகளாக இருந்தாலும், அவற்றிலும் சில தீமைகள் உள்ளன. இதுவே அந்தப் பொருளின் கருப்புப் பக்கமாக உருவெடுக்கிறது. அந்த வகையில் கோதுமை என்பது உடலுக்கு அதிக நன்மை பயக்கும் தானியம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதனை கோதுமை மாவாக மாற்றும்போது, சத்துக்கள் குறைவதுடன், நமக்கு பல்வேறு உடல் உபாதைகளுக்கும் வித்திடுகிறது.
சத்துக்கள் (Nutrients)
கோதுமையில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருந்தாலும், சத்துக்களின் அளவு அது வளர்ந்த மண் மற்றும் சூழ்நிலைகளை பொறுத்து மாறுகிறது.
அதனால் அனைத்து கோதுமைகளிலும் வரையறுக்கப்பட்ட சத்துக்கள் அனைத்தும் இருக்கும் என்பதை யாரும் 100 சதவீதம் உறுதியாகக் கூற இயலாது.உலகில் முதலில் பயிரிடப்பட்ட தாவரங்களில் ஒன்றான கோதுமை, உலகிலேயே அதிகம் பயன்படுத்தப்படும் தானியங்களுள் ஒன்று.
ஊட்டச்சத்துக்கள் (Nutrition Benefits)
பல்வேறு வித்தியாசமான இனங்களைக் கொண்ட கோதுமையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் (Nutrition Benefits) நிறைந்து உள்ளன. செலினியம், மாங்கனீசு என பல சத்துக்கள் இருந்தாலும், கோதுமையில் உள்ள பைடிக் அமிலம் காரணமாக கோதுமையிலுள்ள மாங்கானீசு சத்து குறைவாக உறிஞ்சப்படுகிறது என்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்று.
பாஸ்பரஸ், காப்பர், ஃபோலேட் ஃபோலிக் அமிலம் என பல சத்துக்கள் இருந்தாலும், முழு கோதுமையில் உள்ள பல சத்துக்களும் சுத்திகரிப்பு செய்யப்படும் போது நீக்கப்படுகின்றன.
குறையும் தாதுக்கள்
முழு தானியமாக இருக்கும் கோதுமையுடன் ஒப்பிடும்போது கோதுமைமாவில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைந்துவிடுகின்றன.எனவே, ஊட்டச் சத்துக்களால் செறிவூட்டப்பட்ட கோதுமைமாவே பொதுவாக விற்கப்படுகிறது என்று கூறுவதில் உண்மையில்லை.
செரிமாணப் பிரச்னை (Digestive problem)
அரிசியுடன் ஒப்பிடும்போது கோதுமை செரிமாணம் ஆவதற்கு அதிக நேரம் எடுக்கும். சிலருக்கு கோதுமை செரிமாணம் ஆகாமல், வீக்கம், வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே முடிந்தஅளவுக்கு கோதுமை மாவையும் அளவுக்கு அதிகமான எடுத்துக்கொள்வதும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
தொப்பைக் கொழுப்பு
அதிகளவு கோதுமையைச் சாப்பிடும்போது, அது நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்துவிடுகிறது. இதனால் சாப்பிட்ட 2 மணி நேரத்திலேயே மீண்டும் நொறுக்குக்தீனியைச் சாப்பிடும் எண்ணம் தோன்றும். இதனால், உடலில் தொப்பைக் கொழுப்பு அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
தைராய்டு, நீரழிவு நோயாளிகள்
இது மட்டுமல்ல, தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கும், நீரழிவு நோய் உள்ளவர்களுக்கும், அவர்களது ஆரோக்கியத்தில் கோதுமை பல்வேறுப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க...
Share your comments