1. வாழ்வும் நலமும்

குப்புறப் படுத்துத் தூங்குவதன் பக்கவிளைவுகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Side effects of sleeping on the stomach!

தூக்கம் என்பதுதான் நமக்கு களைப்பை நீக்கி புத்துணர்ச்சி தரும் உன்னத செயல் ஆகும். ஆனால் அப்படித் தூங்கும்போதும் நாம் சிலத் தவறுகளைச் செய்வதால், பல விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. எனவே அந்தத் தவறுகளைத் தெரிந்துகொண்டு, திருத்திக்கொள்வோம்.

மெத்தைமீது குப்புறப் படுத்து தலையணையை இறுக அணைத்து தூங்குவதில் நம்மில் பலருக்கு அலாதி இஷ்டம் இருக்கும். குறிப்பாக அதிகாலை அரைத் தூக்கத்தில் பெரும்பாலானோர் தங்களை அறியாமல் குப்புறப் படுத்துத் தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பர்.

குறையும் குறட்டை

அவ்வாறுக் குப்புறப் படுத்துத் தூங்குவதில் சில நன்மைகளும் உண்டு. சில தீமைகளும் உண்டு. உடற்பருமனான சிலர் மல்லாந்து படுத்துத் தூங்கும்போது குறட்டை உண்டாகும். இதனால் தூக்கம் தடைபடும். நாக்கு உலந்ர்துபோகும். ஆனால் குப்புறப்படுத்து தூங்குபவர்களுக்கு இந்த பிரச்னைகள் கிடையாது.

தண்டுவடம்

ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் குப்புறப் படுத்துத் தூங்குவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவர்களது எடை மொத்தத்தையும் வயிறும் மார்பும் சுமந்துகொண்டு இருப்பதால் முதுகுத் தண்டுவடம் அழுத்தப்படும். இதனால் குப்புறப் படுத்து தூங்கும் சிலருக்கு எலும்பு சந்திப்புகளில் வலி உண்டாகும்.

மேல் முதுகுப் பாதிப்பு

குப்புறப் படுத்துத் தூங்கும் பலர் தலையணை மீது முகத்தைப் புதைத்துத் தூங்குவதைத் தவிர்க்க தலையை இடது அல்லது வலதுபுறம் திருப்பி வைத்து பல மணி நேரம் உறங்குவர். இவ்வாறு செய்வதால் கழுத்து எலும்பு ஒருபக்கமாக சுழற்றப்படுகிறது. இது நாளடைவில் கழுத்து மற்றும் மேல் முதுகுப் பகுதியின் தண்டுவடத்தை பாதித்து வலியை உண்டாக்கும்.

மேலும் படிக்க...

செரிமானத்தை மேம்படுத்த இந்த உணவுகள் போதும்!

ஹோட்டல் நிகழ்ச்சியில் இளம் பெண்களுக்கு பானம் இலவசம் - வித்தியாசமான விளம்பரம்!

English Summary: Side effects of sleeping on the stomach! Published on: 19 September 2022, 11:01 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.