1. வாழ்வும் நலமும்

ஆரோக்கியமான இதயம் மற்றும் வாழ்க்கை முறையை மேன்படுத்த எளிய ஆயுர்வேத குறிப்புகள்

Aruljothe Alagar
Aruljothe Alagar
Simple Ayurvedic Tips to Maintain a Healthy Heart and Lifestyle

இதயம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும், இந்த முக்கியமான உறுப்பு இல்லாமல் வாழ முடியாது. மாறிவரும் காலங்களில் இதயத்தை ஆரோக்கியமான பராமரிப்பது மிகவும் அவசியமானது, மேலும் சுமார் 52% இதயம் சம்மந்தப்பட்ட இறப்புகள் 70 வயதிற்கு முன்பே நிகழ்கின்றன. கடந்த இரண்டு தசாப்தங்களில் மாரடைப்பு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள இறப்புகளுக்கு இதய நோய் முக்கிய காரணமாகி வருகிறது.

கரோனரி தமனிகளில் கொழுப்பு மற்றும் கால்சிஃபைட் பிளேக் படிவதால் மாரடைப்பு ஏற்படுகிறது, இது இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது மற்றும் மாரடைப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது, இதய நோய்கள் ஒரே இரவில் ஏற்படாது, வாழ்க்கை முறை, உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் பலவற்றைப் பொறுத்து. உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் பருமன், நீரிழிவு, மரபணு காரணமாக, உணவுப் பழக்கம் போன்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள் மற்றும் புகைத்தல்/ மதுஅருந்துதல் ஆகியவை மாரடைப்பை ஏற்படுத்தும் சில காரணிகளாகும்.

தினமும் ஆக்ஸிஜனேற்றிகளை உட்கொள்வதால் தமனியில் நச்சுகள் குவிவது வழக்கமாகும் அதனை  தடுப்பது மிகவும் அவசியம். மஞ்சளில் உள்ள குர்குமின், எண்டோடெலியல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது. இது சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது மற்றும் அசாதாரணமான வலுவான ஆக்ஸிஜனேற்றியாகும்.

ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்கவும்,வியாதிகளிலிருந்து விடுபடவும், ஆயுர்வேதத்தின்படி ஒருவர் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கத்தை பின்பற்ற வேண்டும்:

தமனிகளிலிருந்து நச்சுகள் மற்றும் அடைப்புகளை விரைவாகக் கரைக்க பச்சைப் பயறு, பருப்பு, தினை, அரிசி, பார்லி போன்ற புரதங்கள் உதவுவதால் ஒருவரின் இதயத்தை பாதுகாப்பாக வைக்க உதவும்.

  • பீர்க்கங்காய்
  • சுரைக்காய்
  • கோவைக்காய்
  • புடலங்காய்
  • பூசணி
  • கீரைகள்

ஒருவரின் உணவில் 60 சதவிகித காய்கறிகள், 30 சதவிகித புரதங்கள் மற்றும் 10 சதவிகித கார்போஹைட்ரேட்டுகள் இருக்க வேண்டும்.

ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க தினசரி வழக்கத்தில் உணவை சேர்த்துக்கொள்ளலாம்:

1/2 தேக்கரண்டி இஞ்சி சாறு மற்றும் ½ தேக்கரண்டி பூண்டு சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலக்கவும்.

வாழ்க்கை முறையில் மாற்றத்தைக் கொண்டுவர முயற்சித்து, தினமும் 30-45 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள், இது இதய செயல்பாடுகளை மேம்படுத்தி, கொலஸ்ட்ரால் மற்றும் எடையை குறைக்க உதவும்.

இந்த எளிய குறிப்புகளைப் பின்பற்றுவது நிச்சயமாக ஆரோக்கியமான இதயம் மற்றும் வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும்.

மேலும் படிக்க...

ஹார்ட் அட்டாக்கிற்கு வழிவகுக்கும் கொரோனா வைரஸ்- மக்களே உஷார்!

English Summary: Simple Ayurvedic Tips to Maintain a Healthy Heart and Lifestyle Published on: 29 September 2021, 11:18 IST

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.