சக்கரை நோய் என்பது நாம் நினைப்பதைவிட அதிக விளைவுகளை ஏற்படுத்தும். உடல் உறுப்புகளை பாதிப்பதோடு, கூடுதலான நோய்களை ஏற்படுத்தும். இருப்பினும் நாம் சில விஷயங்களைக் கடைப்பிடித்தால், சக்கரை அளவை கட்டுப்படுத்த முடியும் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். எனவே அதனைத் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகிறது.
குறிப்பிட்ட வயதைக் கடக்கும்போது,மறக்காமல் தொற்றிக்கொள்ளும் நோய்களில் சர்க்கரை எனப்படும் நீரிழிவுநோய் முக்கியமானது. இந்த நோய் பல வித நோய்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதுடன், நம்மை துவண்டுபோகச் செய்யும். எனவே சர்க்கரையை விரட்ட, மிக இன்றியமையாதது உணவுக்கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான்.
தவிர்க்க வேண்டியவை
சோர்வான வாழ்க்கை முறை நிச்சயம் நாம் கைவிட வேண்டும். சக்கரை, தயிர், பொரித்த உணவுகள், மைதா போன்ற விஷயங்களை முடிந்தவரை கைவிட வேண்டும். இரவு உணவை கொஞ்சம் முன்பாக சாப்பிடுவது, சரியான நேரத்தில் தூங்குவது முக்கியமான விஷயங்களாக பார்க்கப்படுகிறது.
சாப்பிடவேண்டியவை
இந்நிலையில் இந்த மாற்றங்களுடன் தினமும் மஞ்சள் மற்றும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் , சக்கரை அளவை கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. சுரைக்காய் -முருங்கை சூப்பை ஒரு நாள்விட்டு ஒரு நாள் இரண்டு வேளை சாப்பிடலாம்.
பழங்கள்/ காய்கறிகள்
பாலக் கீரை, சுரக்காய், தக்காளி, முருங்கை, ஆப்பிள், நெல்லிக்காய், பப்பாளி, மாதுளை, கிவி ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும்.
யோகா/ நடைபயிற்சி
தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்வது மிகவும் நல்லது. 5000 அடிகள் நடப்பது உடலுக்கு மிகவும் நல்லது. 10,000 அடிகள் நடப்பது அதைவிட சிறப்பு.
நெல்லி+மஞ்சள்
நெல்லிக்காய் மற்றும் மஞ்சள் பொடி ஆகியவற்றை சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என ஆயுர்வேத மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க...
மரத்தடி வைத்தியரிடம் சிகிச்சை எடுத்துவரும் தோனி!
ஆடிப்பட்டத்தில் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு- TNAU கணிப்பு!
Share your comments