கோடை உழவு செய்து மழை நீரைச் சேமிக்குமாறு, விவசாயிகளுக்கு வேளாண்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
பரவலாக மழை (Widespread rain)
டவ்-தே புயல், வெப்பச்சலனம் உள்ளிட்டவற்றால், தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்துள்ளது.
இதனைக் கருத்தில்கொண்டு, சிவகங்கை மாவட்டவேளாண்மை உதவி இயக்குநர் சு.அழகு ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
மழை நீர் சேமிப்பு (rainwater harvesting)
சிவகங்கை மாவட்டம், கல்லல் வட்டார விவசாயிகள். தற்பொழுது பெய்து வரும் கோடை மழையினை பயன்படுத்தி. தங்களது நிலங்களில் கோடை உழவு செய்து மழை நீரை சேமிக்கலாம்.
சாய்வின் குறுக்கே உழவு (Plowing across the slope)
கோடை கால உழுதல்' என்பது வெப்பமான "காடை காலத்தில் சாய்வின் குறுக்கே உழவு செய்வதாக வரையறுக்கப்படுகிறது.
ஆழமாக உழவு (Plow deeply)
கோடை மழையின் ஈரத்தைப் பயன்படுத்தி நிலத்தை நன்கு உழவு செய்வதால் அதிக நன்மைகள் கிடைக்கும். முதல் மற்றும் முக்கிய நன்மை என்னவென்றால், மண்ணின் கடினமான மேல் புற அடுக்கை உடைத்து, ஆழமாக உழவு செய்வதால் ஊடுருவல் திறன் மற்றும் மண்ணின் ஊடுருவல் அதிகரிக்கும். இது ஈரப்பதத்தின் பாதுகாப்பை அதிகரிக்கிறது.
மண் வளம் பெருகும் (Soil fertility will increase)
இதன் விளைவாக தாவர வேர்கள் குறைந்த முயற்சியால் அதிக ஈரப்பதத்தைப் பெறும். கோடை உழவு செய்வால் மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். இதனால் மண்ணில் நுண்ணுயிரிகளின் செயல்பாடு அதிகமாகி மண் வளம் பெருகும்.
களைகள் அகற்றம் (Weed removal)
குறிப்பாக வயலில் உள்ள களைகள், கோரை மற்றும் இதர களைகள் கோடை உழவு செய்வதினால் மண்ணின் மேற்பரப்புக்குக் கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பத்தில் நன்கு காய்ந்து கட்டுப்படுத்தப்படுகிறது.
பூச்சி மற்றும் நோய் மேலாண்மை (Pest and disease management)
ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் கோடை உழவு செய்வது முக்கிய தொழில்நுட்பமாகும். கோடை உழவு செய்வதால் நிலத்தடியில் உள்ள கூண்டுப் புழுக்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள், வெளியில் கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகிறது.
மண் அரிப்பு (Soil erosion)
இதனால் வரும் பருவத்தில் பூச்சி நோய்த் தாக்குதல் பெருமளவு குறைகிறது. வயல்வெளிகளில் பெய்யும் மழை நீரைச் சேமிப்பதில் கோடை உழவு முக்கிய பங்கு வகுக்கிறது. கோடை உழவினை சரிவின் குறுக்கே உழும்பொழுது மண் அரிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது.
கோடை உழவு கோடி நன்மை (Summer plowing benefits the crop)
-
கோடை உழவு செய்யாத நிலத்தில் நீர் வேகமாக வழிந்தோடி மண் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு பல நன்மைகள் கோடை உழவினால் ஏற்படுவதால் கோடை உழவு கோடி நன்மை' எனக் கூறப்படுகிறது.
-
எனவே, கல்லல் வட்டார விவசாயிகள் தற்பொழுது பெய்து வரும் கோடை மழையினை பயன்படுத்தி தங்களது நிலங்களில் கோடை உழவு செய்து மழை நீரைச் சேமிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
கொரோனா ஊரடங்கால் டன் கணக்கில் வீணாகிறது முல்லைப் பூக்கள்!
தென்னை விவசாயத்தைச் சேர்ந்த 10,000 பேர் வேலையிழப்பு!
Share your comments