உயிரிழப்பை ஏற்படுத்துவதால் ஒமிக்ரான் வைரஸ் தொற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆட்டம் காட்டும் ஒமிக்ரான் (Omicron showing the game)
உலக நாடுகளைக் கடந்த 2 மாதகாலமாக ஆட்டம் காண வைத்திருக்கும் ஒமிக்ரான், அரசுகளை மற்ற வேலைகளை விட்டுவிட்டு, இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளின் பக்கம் திருப்பியுள்ளது. எனவே ஒமிக்ரானிடம் இருந்து உயிர்காத்துக்கொள்ளும் அச்சத்துடன் மக்கள் அனைவரும் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாகவே இந்த வைரஸ் தொற்று பயம் நம்மை வாட்டி வதைத்து வருகிறது.
இருப்பினும், கொரோனா வைரசின் புதியவகை மாறுபாடான ஓமைக்ரான் வைரஸ், உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் டெல்டா விகாரத்தை விட குறைவான கடுமையான நோயை உருவாக்குவதாக கருதப்படுகிறது.
எச்சரிக்கை (Warning)
ஆனால் இந்த வைரசை “சாதாரணமானது” என்று வகைப்படுத்தப்படக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.டெல்டா வைரசுடன் ஒப்பிடும்போது நவம்பரில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஹாங்காங்கில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான ஆபத்து குறைந்துள்ளதாக ஆரம்பகால ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன என்று நிருபர்கள் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் மருத்துவ மேலாண்மைக்கான தலைவர் ஜேனட் டயஸ் கூறியுள்ளார்.
அதேநேரத்தில இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் இருவரிடமும் தீவிரத்தன்மை குறைவதற்கான அபாயமும் இருப்பதாகத் தோன்றுகிறது என்றும் அவர் கூறினார்.
சாதாரணமாகக் கருதக்கூடாது (Not to be taken lightly)
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஓமைக்ரான் குறைவான தீவிரத்தன்மை கொண்டதாகத் தோன்றினாலும், குறிப்பாகத் தடுப்பூசி போடப்பட்டவர்களில், இது லேசானது என்று வகைப்படுத்தப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல.
இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. முந்தைய மாறுபாடுகளைப் போலவே, ஒமைக்ரான் மக்களை மருத்துவமனையில் சேர்க்கிறது, மக்களைக் கொல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
Share your comments