பொங்கல் வந்துவிட்டால் மட்டும்தான் நான் கரும்பைத் தேடி வாங்கி சுவைக்கிறோம். ஆனால், தித்திக்கும் சுவைகொண்டக் கரும்பு,எல்லாக் காலத்திற்கும் ஏற்றதுதான். ஏனெனில் அது உடலுக்கு தரும் நன்மைகள் ஏராளம்.
கரும்பில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனைச் சாப்பிடுவதால் பின்வரும் நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன.
உடனடி ஆற்றல்
கரும்புச் சாறு உடனடி ஆற்றல் தரக்கூடியது. ஏனெனில் இதில் அதிக அளவில் இயற்கை சர்க்கரை நிறைந்துள்ளது. உங்கள் வேலையினை ஆரம்பிப்பதற்கு முன்னால் சிறிதளவு கரும்பு சாற்றினை குடித்தால் உங்களின் செயல்திறன் அதிகரிக்கும்.
பல்லுக்கு வலிமை
கரும்பில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உண்ணும்பொழுது வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் உருவாகச் செய்யும்.
வயதாவதை தடுக்கும்
கரும்பில் அதிக அளவில் ஆன்டி-ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளது. இவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி தோல் சுருக்கம், வயதான தோற்றம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும். இளமை தோற்றத்தை தக்கவைக்கும்.
புற்று நோய்
கரும்பில் அதிக அளவில் ஆன்டி-ஆக்சிடென்டுகள் மற்றும் பிளவனோய்டுகள் நிறைந்துள்ளன. இதனை நீங்கள் உண்டு வந்தால் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும். புற்றுநோய் செல்களை, ஆரம்பத்திலேயே அழிக்கும்.
மன அழுத்தம்
கரும்பில் அதிக அளவில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.
சிறுநீரகம்
கரும்பில் அதிக அளவில் பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவில் சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது சிறுநீரக ஆரோக்கியத்தினை மேம்படுத்தும். மேலும் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.
கல்லீரல்
கரும்பு சாற்றில் அதிக அளவில் உள்ள எலெக்ட்ரோலைட்கள் கல்லீரலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவும். எனவே கல்லீரலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த விரும்புபவர்கள் தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு பருகுங்கள்.
மேலும் படிக்க...
ரயில்வே தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்ட 3வயது குழந்தை - அமெரிக்காவில் கொடூரம்!
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38%மாக உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!
Share your comments