சுவைகளில் ஆறு இடம்பெற்றிருந்தாலும், கசப்பும், துவர்ப்பும், அவ்வளவாக விரும்பப்படாதவை. இருந்தாலும், அவை இரண்டையும் உணவில் சேர்த்துக்கொள்வது சாலச் சிறந்தது.
பக்கவிளைவுகள் (Side effects)
அந்த வகையில், கசக்கும் காய் என்றாலும் பாகற்காயைச் சமையலில் சேர்த்துக் கொள்வதில் இருந்தே இதன் முக்கியத்துவம் புரியும். இருப்பினும் அதிகளவு எடுத்துக்கொள்ளும்போது பல பக்கவிளைவுகளை நாம் எதிர்கொள்ள நேரிடும்.
மருத்துவ நன்மைகள் (Medicinal benefits)
உடலுக்குக் குறைந்த ஆற்றல் வழங்குபவை பாகற்காய்கள். அதாவது 100 கிராம் பாகற்காய் மூலம் நமக்கு 17 கலோரி ஆற்றல் மட்டுமேக் கிடைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி (immunity)
பாகற்காயின் விதைகள் எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு பொருட்களைக் கொண்டுள்ளன. சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின்-சி, பாகற்காயில் மிகுதியாக உள்ளது.
புற்றுநோய் (Cancer)
பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின், லுடின், ஸி-சாந்தின் போன்ற புளோவனாய்டுகள் உள்ளன. அத்துடன் வைட்டமின்-ஏ அதிக அளவில் உள்ளது. இவை புற்றுநோயை உருவாக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதோடு, வயது மூப்படைவதில் இருந்தும், வியாதிகள் தாக்காதவாறும் பாதுகாக்கும்.
அஜீரணத்தைப் போக்கும்
ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் பாகற்காய்க்கு உண்டு. மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தைப் போக்கும்.
வைட்டமின்கள் (Vitamins)
வைட்டமின்-பி 3, வைட்டமின் பி-5, வைட்டமின்-பி6 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்ற முக்கியத் தாதுக்களும் பாகற்காயில் இருந்து உடலுக்கு கிடைக்கின்றன.
இருப்பினும் பாகற்காயை அதிளவு உணவில் எடுத்துக்கொள்வது அவ்வளவு நல்லதல்ல. அவ்வாறு எடுத்துக்கொண்டால் பின்வரும் பல்வேறுப் பக்கவிளைவுகளை நாம் எதிர்கொள்ள நேரிடும்.
தீமைகள் (evils)
கருச்சிதைவு (Miscarriage)
கர்ப்பிணிப் பெண்கள் பாகற்காயை அதிகளவில் சாப்பிடக்கூடாது. அதனை அதிகமாக உட்கொள்வது, தோளில் சுருக்கங்களை ஏற்படுத்தும். கருச்சிதைவுக்கு வழி வகுக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மயக்கம் (Dizzy)
பாகற்காய் போன்ற கசப்பான காய்கறிகளை சாப்பிடுவது, உடலில் சர்க்கரையின் அளவைக் குறைப்பதோடு, அடிக்கடி மயக்கத்திற்கு வழிவகுக்கும். ஏற்கனவே நீரிழிவு நோய்க்கு மருந்து எடுத்துக் கொண்டிருப்பவர்கள், பாகற்காயைத் தவிர்ப்பதே நல்லது.
ஒழுங்கற்ற இதயதுடிப்பு (Irregular heartbeat)
அளவுக்கு அதிகமாக பாகற்காயைச் சாப்பிடுவதால் இதயத்திற்கு அதிக இரத்த ஓட்டம் ஏற்படுகிறது, இதனால் மார்பில் இரத்தக் கட்டிகள் உருவாகி மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுகிறது.
நாம் நிறைய பாகற்காயைச் சாப்பிட்டால், நம் உடலில் நிறைய இன்சுலின் சுரக்கும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இதன் விளைவாக ஒரு ஒழுங்கற்ற இதயதுடிப்பு ஏற்பட வாய்ப்பு உருவாகிறது.
வாந்தி (Vomiting)
பாகற்காயின் நச்சுத்தன்மைக் காரணமாக சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. பாகற்காய், குகர்பிடாசின்களைக் கொண்டிருப்பதால் நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருக்கலாம்.
சர்க்கரை நோய்க்கு மட்டுமல்ல, உடல் எடை குறைவிற்கும், கசப்பு ச்சத்து ஒரு நல்ல மருந்து. இருப்பினும், அதிகமாக சாப்பிடுவது பல பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்துகொண்டு, நாம் பாகற்காயை அளவுடன் சாப்பிடுவதே நல்லது.
மேலும் படிக்க...
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் 95% மரணத்தை தடுக்கலாம்: ICMR ஆய்வில் தகவல்
ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடர வேண்டும் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Share your comments