1. வாழ்வும் நலமும்

பள்ளி மாணவியைப் பலி வாங்கிய சிக்கன் - ஷவர்மா சாப்பிட்டதால் விபரீதம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
The chicken that killed the schoolgirl - the tragedy of eating shawarma

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி திடீர் மரணம் அடைந்த சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டு உள்ளார்.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் செருவத்தூர் பஸ் நிலைய பகுதியில் ஷவர்மா உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் ஏராளமானோர் சிக்கன் ஷவர்மா வாங்கி செல்கின்றனர். பலர் உணவகத்தில் அமர்ந்து சாப்பிடுகின்றனர்.

அவ்வாறு கரிவல்லூரை சேர்ந்த நாராயணன் என்பவரின் 16 வயது மகள் தேவநந்தா என்ற சிறுமியும் ஷவர்மா வாங்கி சாப்பிட்டார்.இதனை சாப்பிட்ட சில மணி நேரத்தில் தேவநந்தாவுக்கு வாந்தியும், வயிற்று போக்கும் ஏற்பட்டது. உடனே அவரை பெற்றோர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், தேவநந்தா சாப்பிட்ட உணவு காரணமாகவே அவருக்கு வாந்தியும், வயிற்று போக்கும் ஏற்பட்டிருப்பதாக கூறினர். இதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. ஆனால் மாணவி சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். தேவநந்தா பலியான சிறிது நேரத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பலரும் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களுக்கும் வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டிருப்பதாக கூறினர்.

சுமார் 31 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் அனைவருமே அந்தக் குறிப்பிட்ட ஹோட்டலில் உணவு உண்டவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த ஹோட்டலுக்கு சென்று சோதனை நடத்தி சீல் வைத்தனர். அங்கிருந்த உணவினை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே போலீசாரும் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். ஹோட்டல் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். செருவத்தூர் சம்பவம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் படிக்க...

படுக்கைக்குச் செல்லும்முன்பு 3 ஏலக்காய்- எத்தனை நன்மைகள்!

எந்த நேரத்திலும் உடற்பயிற்சி செய்யலாமா?

English Summary: The chicken that killed the schoolgirl - the tragedy of eating shawarma Published on: 02 May 2022, 11:09 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.